பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டுமென்ற அவசியமில்லாமல் சாதல் பிறத்தலைத் தவிர்த்து மரணமிலாப் பெருவாழ்வை-இன்ப அன்பு நிலையை அடைந்து விட முயற்சி செய்வது சான்றோர் கடன்; அறிந்தோர்க்கு அழகு, இந்தக் குறிப்பில் "தோற்ற முண்டேல் மரணமுண்டு" என்று ஆரூரர் குறிப்பிடுகின்றார்.

துயர மனைவாழ்க்கை?

"துயர மனைவாழ்க்கை, மாற்றமுண்டேல் வஞ்சம் உண்டு” என்று பாடுகிறார் நம்பியாரூரர். நம்பியாரூரர், பெற்ற சிற்றின்பத்தையே பேரின்பமாக நுகர்ந்தவர். பரவையாருடன் கூடி வாழ்ந்த வாழ்க்கையை யோக வாழ்க்கையென்று சேக்கிழார் பாராட்டுகின்றார். அப்படியாயின் துயர வாழ்க்கை என்று கூறியது ஏன்? இப்பாடலின் அடுத்த அடியில் "மாற்ற முண்டேல் வஞ்சமுண்டு என்கிறார். உயிர்க்கு இயல்பு அன்பாக இருத்தல். ஆனால் சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாக அன்புக்குப் பதிலாக அன்பின் இடத்தில் ஆசை வந்து விடுகிறது; அன்பு வேறு; ஆசை வேறு. ஆசை கொச்சைத்தனமானது; முற்றாகத் தற்சார்புடையது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் நிர்வாணத் தன்மையுடையது. ஆசை ஒரு தலைப்பக்கமாகவே இயங்கும். இத்தகைய ஆசை மேம்பட்டு அன்பு வாழ்க்கை இல்லாமற் போமாயின் வஞ்சமுண்டு; துயரமுண்டு. இந்த சூழ்நிலையில்தான்் மனைவாழ்க்கை துயரமாக உருமாற்றம் பெறுகிறது. மணவாழ்க்கையில் நாயகன் நாயகிகளாக இருந்தும் ஒத்த அன்பின்றி ஆசைகள் நிறைவேறாத பொழுது ஏமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அன்புக்கே உரிய மனை வாழ்க்கை துயரமாக மாறிவிடுகிறது. அதனால் ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்றும் இதே பதிகத்தில் நம்பியாரூரர் பாடுகின்றார். அதனால்தான் திருமூலரும் ஆசை அறுமின்கள்! ஆசை அறுமின்கள்! என்றார். இத்திருப்பதிகம் எதிர்கொள்பாடித் திருப்பதிகம். இத்திருப்பதிகத்தின் பெயரைக் கொண்டே திருத்தலத்தின் பெயரும் வந்திருக்குமானால் பொருத்த முடையது. இனிவரும் எதிர் காலத்தில்