பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை!
சேர்ப்பது காட்டகத் துரரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்தினங் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே!

(ஏழாம் திருமுறை 178)


என்பது முதற்பாடல்; இறைவன்-கடவுள், பிறவாதவன்; இறவாதவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாமையால் மூப்பு எய்தாதவன் என்பது உணர்த்தப்படுகிறது. சாதலும் பிறத்தலும் துன்பம் தரும்நோய், இத்துன்பங்கள் இல்லாத ஒன்றையே இறைவன் கூற இயலும், சைவம், இசுலாமியம், கிறித்தவம் ஆகிய சமய நெறிகளைச் சேர்ந்தவர்கள் இறைவனுக்குப் பிறப்பும் இல்லை மூப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்து சமயம் என்ற போர்வையில் மிண்டிய நிலையில் வளரும் மாயாவாதக் கொள்கையினர் "கடவுளே உயிர்; உயிரே கடவுள்" என்று கூறி, தம், அறியாமையைப் புலப்படுத்துவது நகைத்தற்குரியது. அதோடு கருவாய்ப் பட்டுப் பிறந்து வாழ்க்கையில் உழன்று வாழ்ந்தவர்களையும் உயர் ஆன்மாக்கள் என்றும், நம்மிலும் வளர்ந்தவர்கள் என்றும் ஆசிரிய நிலையை உடையவர்கள் என்றும் வாழ்த்தலாமே தவிர, கடவுள் என்று போற்றுதல் இயலாது. அதனாலன்றோ இளங்கோவடிகள் "பிறவா யாக்கைப் பெரியோன்” என்று வாழ்த்தினார். பிறத்தலும் இறத்தலுமாகிய ஐம்பூதங்களாலாகிய திருமேனி இறைவனுக்கு இல்லை. ஆதலால், நஞ்சும் அமுதும் இவருக்கு வேறுபாடு இல்லை. ஆதலால், நாகப்பாம்பு அணியாகிறது. இறைவன் கறுத்த கண்ட