பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேக்கிழார் செந்நெறி

257


என்று வேண்டுகின்றார். பரவையார் நகைத்தாலும் இறைவன் திருவுள்ளமே! ஆனாலும் ஏற்க இயலாமல் ஆரூரர் அலமருகிறார்.

அன்பில் வரும் பாட்டு

நம்பியாரூரர் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை, திருவாரூர் கமலாலயக் குளத்தில் தேடுகின்றார்; இறைவன் ஆணைப்படி தேடுகின்றார்; கிடைக்கவில்லை. பரவையாரோ ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் பான்மையைக் கண்டு நகைக்கின்றார். ஆனால், நம்பியாரரர் நகைக்கவில்லை. நம்பியாரூரருக்குத் திருவருளில் நம்பிக்கை இருக்கிறது. ஆதலால் ஆரூரருக்கு நகைப்பு வரவில்லை. நம்பியாரூரர் பொன் கொடுத்த திருமுதுகுன்றத்து இறைவனை எண்ணிப் பாடுகின்றார்.

நீந்தாருள் தொடர்வரிய நெறி நின்றார்

பொன்னை நினைந்து பாடும் பாடல் 'பொன் செய்மேனியினீர்' என்று தொடங்குகிறது. பாட்டின் நோக்கம் கமலாலயத்தில் பொன் கிடைக்க வேண்டுமென்பது. பரவையார் முன்னிலையில் பொன் பெறாதொழிவது பெருந்துன்பமாக இருக்கிறது. இடர்ப்பாடாக இருக்கிறது. இந்த இடத்தில் சேக்கிழார் ஐயத்தினை எழுப்பி விடையளிக்கும் வகையில் பாடுகின்றார். ஆரூரர் பற்றிச் சேக்கிழார் 'நீத்தாருள் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும் என்று அருளிச் செய்துள்ள பான்மை அறிக. நம்பியாரூரர் பொன் எடுக்க வேண்டித் திருக்குளத்தில் இறங்குகின்றார். பொன்னாசை பெண்ணாசை ஆகிய இரண்டும் உடையவராக விளங்கினார் நம்பியாரூரர்; ஆனாலும் நீத்தாருள் தொடர்வரிய நெறிநின்றார் என்று பாராட்டுகின்றார். இந்த இடத்தில் தமிழகச் சமய நெறி உணர்த்தும் உண்மையை உணர்தல் நல்லது. அப்பரடிகள்

Ф5. Іх 77.