பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவனை, 'துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!' என்றார். ஆதலால் துய்த்தது அறவாழ்க்கையேயாம். இறை நெறிக்கிசைந்த வாழ்க்கையேயாம். ஆனால், துய்த்தலில் சில மரபுகள் உண்டு. துறவு நெறிப் பான்மையில் துய்த்தல் வேண்டும். ஆரூரர் பொன் வேண்டுகிறார். பரவையார் வருந்தாமலிருக்கவே பொன் வேண்டுகின்றார். பரவையாருக்கும் பொன், ஆடம்பர வாழ்க்கைக்கு அன்று. அடியார்களுக்குப் பணி செய்யவேயாம். ஆதலால் பொன் நாடுதல் குற்றமன்று. இல்லறத்திலே, சிறந்த துறவிகள் வாழ்ந்துள்ளனர். துறந்தாரைப் போலக் காட்டிப் பேராசை அவலத்துள் வீழ்ந்தவர்களும் உண்டு. ஆரூரர் அப்படிப் பட்டவரல்லர்.

நான் செய்த பிழை என்ன?

ஆரூரர் தொழுது வணங்கியே பழக்கப்பட்டவர்; தேவைக்காக வழிபடுபவர் அல்லர். இறைவன் அருளினாலும் சரி, அல்லற்படுத்தினாலும்சரி ஆரூரரால் இறைவனை ஏத்தி வழிபடாமல் இருத்தல் இயலாது. அதனால் ஆரூரரின் பாடலைக் கேட்பதற்காகப் பொன்னைத் தராமல் காலம் கடத்த வேண்டியதில்லை. காக்க வேண்டியதில்லை என்றெல்லாம் பதிகத்தில் பாடுகின்றனர். 'திருமுது குன்றுடையானே! முன்பு முயன்று கட்டிய மூன்று அரண்களை எரித்தீர்! அதுபோல் எம் ஆர்வத்தைக் கெடுத்து விடாதீர்! திருமுதுகுன்றத்துள் உறையும் இறைவனே! நீர் எனக்குப் பொன் கொடுத்தது உண்மை! ஆம்! நீர் பொன்கொடுத்ததற்குச் சாட்சியாகத் தேவர்கள் இருக் கின்றனர்! தேவர்களின் தலைவர்கள் இருக்கின்றனர். இறைவா, நின்னில் பாதியான பெண் உமையம்மை உடனிருக்கிறாள். உமக்குத் தெரியாதா பெண்களின் மனம்! அனுபவத்தில் தெரியாது போனாலும் நீர் படித்துணர்ந்த வேதங்கள் உணர்த்தவில்லையா? நீர் இப்போது எமக்குப் பொன்னைப் பெற அருள் செய்யாமைக்குக் காரணம் நான்