பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காமம்தான்! பெளத்த, சமணச் சார்பு தமிழர்க்குக் கிடைத்த பிறகு “காமம்" தவறானது என்ற கருத்து உருவாகியது. உயிரியல் சாத்திர முறைப்படி விருப்புறுதலும் துய்த்தலும் தவிர்க்க இயலாதது. இறைவனே உயிர்க்குத் துணையாயிருந்து துய்ப்பிக்கின்றான் என்பதே தமிழர் கொள்கை சொல், பொருள் உணர்தலுக்குத் தடையாக இருக்கும் ஆணவத்தினை அறுத்தருளுபவன் இறைவன். தன்னைத் திருவெண்ணெய் நல்லூரில் பழைய ஆவணங் காட்டி ஆண்ட நிகழ்ச்சி நினைவு கூரப்பெறுகிறது. திருநள்ளாற்றிலிருந்து திருக்கடவூர், வந்தடைகின்றார். திருமயானம் என்ற திருத்தலத்தையும் வணங்குகிறார். திருக்கடவூரும், திருமயானமும் ஒரே தலமென எண்ணித் தொழக்கூடிய பதிகளாகும். மயானத்தை, திருக்கடவூர் மயானம் என்றும் கூறுவர்

திருக்கடவூர் சிறப்பு

திருக்கடவூர் புகழ் பெற்ற திருத்தலம். காலனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த திருத்தலம். இன்றும் சாகாமல் வாழ ஆசைப்படுவோர் கடவூர் சென்று பூழிபடுவர். காலனைக் காலால் காய்ந்த காலசங்கார மூர்த்தியாக எழுந்தருளும் திருமேனியில் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அபிராமியும் கண் கண்ட தெய்வம். அபிராமி அந்தாதி நாளும் ஓதுதல் நற்பயனைத் தரும். கங்கு கரையற்று, அருளும் அன்னை இந்த அன்னை இத்திருத்தலத்தின்தான் முதன் முதலில் நமது சமயப்பணி-திருக்கோயிற்பணி கட்டளைத் தம்பிரான் என்ற பெயரில் தொடங்கியது. அன்னை அபிராமியின் அருளால் யாதொரு குறையுமில்லாமல் வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமது வாழ்க்கையில் திருக்கடவூர் மயானம் நினைவகலாத் திருத்தலமாகும். குன்றக்குடி ஆதீனத்திற்குப் பட்டம் கட்ட ஒருவர் தேவை. அருளும் பொருளும் நிறைந்த நிறுவனங்களுக்கே பொறுப்பேற்க ஆள்தேடும் அளவுக்கு