பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

265


அவல நிலை, நமது சமயத்திற்கு நேர்ந்துள்ளமை வருந்தத்தக்கது. நம்மை அழைத்தனர். நாம் உடன்படவில்லை. நம்மை கடத்திக் கொண்டு வர முயன்றனர். அவர்கள் முயற்சி தோற்றுப் போயிற்று. பின் மூலையில் இருந்த நம்மை முற்றத்தில் கொண்டு வந்து விட்ட கயிலைக்குருமணி அவர்களை அணுகிக் கேட்டனர். குருமணி அவர்களிடமும் நாம் உடன்படவில்லை கயிலை குருமணி அவர்களுக்கு, குன்றக்குடி ஆதீனத்தைத் காக்கும் கடமை உணர்வு, நம்மைப் பிரிய இயலாப் பாசம், இவ்விரண்டிற்கும் இடையே ஏற்பட்ட அறச் சங்கடம்! சிந்தித்தார்கள். திருமுறைகளில் உறைப்புக் கொண்ட குருமணி அவர்கள் திருமுறைகளையே துணை யாகக் கொண்டு முடிவெடுக்கத் திருவுள்ளம் கொண்டார்கள்.

திருக்கடவூர்த் திருப்பதிகம்

கயிலைக் குருமணி அவர்கள், நாள் பூசையில் திருமுறைகளில் கயிறு சார்த்தினார்கள். திருக்கடவூர் மயானத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருப்பதிகமே கிடைத்தது. பதிகத்தின் திருக்காப்புப் பாடலில்

"விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
     மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
     கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
      இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
     பெரிய பெருமா னடிகளே”

(ஏழாம் திருமுறை 53-2)

என்ற திருப்பாடல் கிடைத்தது. திருப்பதிகத்தில் "விண்ணோர் தலைவர்” என்ற குறிப்புடைய பாடல்