பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எல்லாத் திருத்தலங்களிலும் இறைவன் எழுந்தருளியிருக்கின்றான்! ஆயினும் ஆரூரர் நீடுருக்குச் சென்று வழிபாடியற்றினால் நீடுருக்குப் பெருமை சேரும்! நீடூர் மக்கள் நலம்பெறுவர் என்ற திருக்குறிப்பில் நீடுருக்கு வரும்படி அழைக்கின்றார்! ஆரூரரும் இறைவனின் அழைப்பை ஏற்று நீடூர் செல்கின்றார். சேக்கிழார் "செப்பரிய புகழ் நீடுர்" என்று பாராட்டுகின்றார்.

நீடுரின்கண் இப்பொழுது நமது சமய மரபினர் வாழ்நிலை எண்ணிக்கை குறைந்துள்ளது. முகம்மதியர்கள் நிறையப் பேர் வாழ்கின்றனர். ஹாங்காங் முதலிய நாடுகளில் சென்று பொருள் ஈட்டி நீடூரின் புகழ் வளர்க்கின்றனர். நீடுரைச் சார்ந்த திரு. அய்யூப்...ஹாங்காங்கில் வாழ்கிறார். நல்ல அன்பர்; விருந்தோம்பல் இயல்பினர். நாம் ஹாங்காங் கிற்கு 1982ஆம் ஆண்டில்சென்ற பொழுது இவருடைய இனிய அன்பில் மூழ்கும்பேறு கிடைத்தது.

திருநீடுரில் அருளிச் செய்த பதிகத்தை, "மெய்ப்பொருள் வண்டமிழ்மாலை" என்று சேக்கிழார் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். ஏன்? இறைவன் கற்ற கல்வியிலும் இனியான்! குற்றமொன்றும் இல்லாத அடியார்கள் எளிதில் இறைவனை அடையலாம். மாய மனம் கெடுத்து, மனம் கொடுத்து, மனத்துள் அறிவாக நின்றருள் செய்வான்! துன்பத் தொடக்கிலாததே இன்பம் என்றும், உயிர்களின் பிறப்பு, வினைகளியற்றல், வினைப்பயன் நுகர்தல், இன்ப அன்பு அடைதல் ஆகியவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும், கூறுதலின் "மெய்ப் பொருள் வண்டமிழ்மாலை" என்றார். திருநீடுரை வணங்கி திருப்புன்கூரை யணைந்து வழிபாடு செய்து கொண்டு திருக்கோலாக்காவைச் சென்றடை கின்றார்.

திருக்கோலக்கா

திருக்கோலக்கா இறைவன் ஆரூரருக்கு எதிரில் வந்து காட்சி தருகிறார். ஆருரர் திருக்கோலக்காவில்