பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

275


திருத்தலங்களை வழிபட்டிருக்கக் கூடும் என்று கருதப் பெறுகிறது. ஆனால் சேக்கிழர் 'கழிப்பாலை தொழுதேத்தி” என்று கூறுவதால் திருக்கழிப்பாலை என்ற திருத்தலத்தை வணங்கிச் சென்றுள்ளார். திருக்கழிப்பாலை என்ற திருத்தலம் இருந்தது. இந்தத் திருத்தலத்தை கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கொண்டு போய்விட்டது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் "மூர்த்தி, இப்போது சிவபுரி திருக்கோயிலில் எழுந்தருளச் செய்யப் பெற்றுள்ளது. திருக்கழிப் பாலையில் நம்பியாரூரர் அருளிச் செய்த திருப்பதிகம் மிகவும் அருமையானது. இறைவனின் திருவிளையாடல்கள் பலவற்றையும் வியந்து பாராட்டிப் புகழ்ந்து பாடிய பதிகம் இது தத்துவ விளக்கங்களும் நிறைந்த பதிகம் இது.

கண்டம் கறுத்தவன்

நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் விரித்துரைக்கப் பெறும் பதிகம் இது. உயிர்கள் தீவினையில் கிடந்துழன்றாலும் இறைவன் வந்து உடன் எடுத்தாள மாட்டான் என்பது முதற்பாட்டின் கருத்து. வினை, துய்த்துக் கழிக்கப் பெற வேண்டியது. வினைப்போகம் அழியும் வரையில் இறைவன் மருந்துண்ணும் குழந்தைக்குத் தாய்போல நின்று ஆட்கொள்கிறான். இது பாசம் சேர்ந்த உலகியல் வாழ்நிலை. இறைவனுக்கு ஒருர் இல்லை. ஆதலால், ஆரூரர் எங்கிருந்து அழைத்தாலும் ஆங்கு இறைவன் சென்று ஆட்கொள்வான்! ஆட்கொண்டருளியது மட்டுமின்றி இறைவன் நம்பியாரூரருடன் நின்றருளி ஆட்கொள்பவன். இறைவன் தனது ஆட்கொள்ளும் திறத்தில் ஒறுத்தலும் உண்டு; பொறுத்தலும் உண்டு. ஆனால் முடிவாக இறைவன் அருளுதலையே தன்மையாக உடையவன் என்பதைப் புலப்படுத்த "கண்டங் கறுத்தாய்” என்றார்.

ஒறுத்தாய் நின்னருளில் லடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப்
                           பொருட்படுத்துச்