பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!

(ஏழாந் திருமுறை-231)

என்பது திருப்பாட்டு, திருக்கழிப்பாலையில் எழுந் தருளியுள்ள பழிசேரில் புகழானைப் பணித்தேத்தித் தில்லைநகருக்குப் பயணமானார்.

பெரியோனுக்கருளிய பெரியோன்

நம்பியாரூரர் திருத்தில்லையை மூன்றாவது முறையாக வழிபட்டார். தில்லை நகரில் பல ஆண்டுகள் தங்கி வணங்கினார். தில்லையின்மீது ஆரூரருக்குப் பெருமதிப்பு உண்டாதலின் புறத்தே வேறொரு பதியில் தங்கினார் என்று சிவக்கவிமணி கூறுவார். தில்லையில் பல பொழுதுகள் வணங்கி மகிழ்ந்த நிலையில் திருத்தினைநகர் என்ற திருத் தலத்திற்கு வந்து சேர்ந்தார்.

இன்று தீர்த்தனகிரி என்று விளங்கும் ஊர் 10ஆம் நூற்றாண்டில் ஆரூரர் காலத்தில் திருத்தினைநகர் என்று பெயர் பெற்றிருந்தது. கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள சிற்றுார். புதுச்சத்திரம் புகைவண்டி நிலையத்தின் அண்மையில் இருக்கிறது. இத்திருத்தலம் புதுமை விளைவித்தது; புரட்சி பூத்தது. பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பெரியான் என்ற ஒருவன் உழுதொழிலைத் தொழிலாக உடையவன். ஒரு நாள் பள்ளன் பெரியான் உழுது கொண்டிருக்கும் பொழுது பெருமான், ஜங்கமர் திருக்கோலத்தில் வந்து உணவு கேட்கிறார். பெரியானிடத்தில் அப்போது கையில் உணவு இல்லை. ஊருக்குள் உணவு எடுத்துவரச் சென்றான். பெரியான் வருவதற்குள் அவன் உழுத நிலத்தில் தினை விளைந்துவிட்டது. ஜங்கமரைக் காணோம். எல்லாம் இறைவனின் திருவருள் செயல். பள்ளன் பெரியான் சிலை திருக்கோயிலில் இருக்கிறது. திருத்தினை நகருக்கு ஆரூரர் வந்து வணங்கி மகிழ்ந்தார். பாடியருளிய பதிகங்கள் கிடைக்கவில்லை.