பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

தலைமைப் பேருரை*

தமிழகமும் சமயமும்

'தமிழினம் காலத்தால் மூத்த இனம்; கருத்தாலும் மூத்த இனம்; இற்றைக்குப் பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இன்பவுணர்வாகிய அகத்திணையியலிலும் பொருள் அறங்களின் உணர்வாகிய புறத்திணையியலிலும் செழுமையுற வளர்ந்த இனம். இதனைச் செப்பமுற வளர்ந்த தமிழ் மொழியின் இயல்பும் சிந்தனையிற் சிறந்த தமிழிலக்கியங்களும் முழுமையுற வளர்ந்த தமிழகச் சமய அமைப்பும் விளக்குவனவாம்.

தமிழ், வளர்ந்த மொழி; தனித்து இயங்க வல்ல நிறைநலஞ்சான்ற குறைவிலா மறைமொழி, இலக்கியத்தின் அனுபவத்திறன் தந்த பயனாக இலக்கண வரம்பு பெற்ற மொழி, எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி, அம்மொழியினைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் பொருளிலக்கணம் கண்ட மொழி; மனிதனின் வாழ்க்கையை மையமாகக்


  • சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பெரிய புராணச் சொற்பொழிவுகள்.

கு.IX.2