பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலும் அன்பில் வளர்கிறார்கள். அடியவர்களுடைய அன்பு அனுபவத்தில் மூழ்கித் திளைக்கும் இறைவன், அடியவர்கள் துன்பத்தைத் துடைப்பதை மறந்து விடுகின்றான். அதனால் "மதியுடையவர் செய்ன் செய்யீர்” என்றார். நம்மைச் சார்ந்தாரே நம்முடன் ஒன்றிக் கிடப்பாரின் துன்பத்தை மாற்றுதல் வாழ்வியல் கடமைகளுள் தலையாயது என்ற - உண்மை உணர்த்தப்படுகிறது. துன்பம் மிகுதியாக மிகுதியாக அன்பு குறைகிறது. வாழ்ந்திடல் வேண்டும் வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. அதனால் வாழ்க்கையின் மிகமிக விழுமிய பொருளைக்கூட ஒற்றி வைத்து உண்ணவிரும்புவது தவிர்க்க இயலாதது. அதுபோல அடியவர்கள் இறைவனை ஒற்றிவைத்து உண்ண அனுமதிக்கப்படுவது. அழகோ என்று கேட்கிறார். இறைவனை ஒற்றி வைத்தல் என்றால் என்ன? இறைவனுக்கு ஆட்படுதலுக்குப் பதில் சிறு தேவதைகளுக்கு ஆட்படுதல் ஆகும். இப்போது பலர் இறைவனுக்கு அன்பு காட்டி ஆட்படுவதற்குப் பதில் "சனியனுக்கு" அல்லவா ஆட்பட்டுள்ளனர். சனியனுக்கு "ஈஸ்வரன்” பட்டத்தைச் சேர்த்து சனி ஈசுவரன் என்று கூறுகின்றனர். இதுமுறை யன்று. "சென்று சிறுதெய்வங்கள் பால் சேர்வோமல்லோம்” என்றார் அப்பரடிகள்.

"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"

என்றார். திருஞானசம்பந்தர். ஆதலால் பரசிவமே கடவுள். பரசிவமே தனக்குவமை இல்லாத தலைவன் - வாலறிவன் என்று தெளிந்து துணிந்து வாழ்த்தி வாழ்தலே சமய வாழ்க்கை - சைவவாழ்க்கை என்பது இந்தப் பாடலின் சிறந்த பொருள்.