பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

293



திருஒணக்காந்தன்தளியில் நம்பியாரூரர் அருளிய பதிகம் முழுதும் இறைவனுடன் நம்பியாரூரர் கொண்டிருந்த அன்புரிமை பற்றியதேயாம். இந்தப்பதிகம் நம்பியாரூரர் இறைவனிடத்தில் கொண்டிருந்த தோழமைத் திறத்தினை வெளிப்படுத்துகிறது. திருஒணக் காந்தன்தளி இறைவனைத் தொழுது வணங்கி மகிழ்ந்த பொழுது, இறைவன் அருகில் உள்ள புளியமரத்தில் ஒளிந்திருந்து புளியங் காய்களைப் பறித்து ஆரூரருக்கு அருளியதாகவும், அவை பொற்காசு களாய் ஆயின என்றும் ஒரு மரபு வழி வரும் வரலாறு உண்டு.

திருஒணக்காந்தன் தளியை வணங்கி மகிழ்ந்த நம்பியாரூரர் அடுத்து திருக்கச்சி அநேக தங்காவதம் வணங்கி, திருக்கச்சியை நினைந்தவாறே அமர்ந்திருந்தார்.

பனங்காட்டுரின் பரமனை ஏத்தினார்

திருக்கச்சியில் தங்கியிருந்த நம்பியாரூரர் மீண்டும் திருத்தல வழிபாடுகளை விரும்பிப் பயணம் செய்யலானார். திருக்கச்சியிலிருந்து திருப்பனங்காட்டுர் என்ற திருத்தலத் திற்குச் சென்றார். இந்த ஊர் வன்பாக்கம் என்ற ஊருக்கு அருகாமையில் இருப்பதால் திருவன்பார்த்தான்் பனங்காட்டுர் என்று பெயர்பெற்றது. இப்பொழுது திருப்பனங்காடு என்று பெயர்பெற்று விளங்குகிறது. இத் திருத்தல மரமும் பனைமரமேயாம். அகத்தியர், புலத்தியர் பூசித்த தலம் இது. இத் திருத்தலப் பதிகம் மிகவும் அருமையானது. நம்ம னோரைத் தெளிவித்து ஆற்றுப்படுத்தும் தகைமையுடையது. ஒவ்வொரு பாடலிலும் நம்மனோரின் சார்பும், உணர்வும், அறிவும் திருவன்பார்த்தான்் பனங்காட்டுரில் எழுந்தருளி யுள்ள நாயகனே என்று எடுத்துக் கூறுகின்றார். அன்பு நாயகன் திருவடியைப் பற்றிக்கொண்டு உய்யுமாறு உணர்த்தும் அற்புதமான பாடல்கள் அவை. காலன், காலத் திற்குத் தலைவன்; காலத்திற்குரிய முதல்வன். இது உண்மை. ஆயினும் காலனுடைய காலம் பற்றி நிற்கும் முதன்மை, சிவம்