பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

295


சென்றார். திருமாற்பேறு, திருவல்லம் ஆகிய திருத்தலங்களில் நம்பியாரூரர் அருளிச் செய்த பதிகங்கள் கிடைக்கவில்லை. சேக்கிழார், திருக்காளத்தியை நம்பியாரூரர் நண்ணிய வரலாற்றை எடுத்த தமிழில் அன்புருகப்பாடத் தொடங்குகின்றார்.

"தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளால் ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.”

(ஏயர்கோன். 4. 196)


மலைமேல் மருந்து

நம்பியாரூரர் திருக்காளத்தியை அடைந்து வணங்கும் காட்சி.

"தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளால் ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்”

(ஏயர்கோன் 4. 196)

கண்ணப்பரின் மாட்சி இப்பாடலில் உணர்த்தப் பெற்றுள்ளது. கண்ணப்பர் காளத்தியப்பரிடம் காட்டிய