பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பு, எவராலும் தடுத்து நிறுத்த இயலாதது. எந்தச் சூழ்நிலையிலும் கண்ணப்பரின் அன்பு தடைப்படவில்லை. கண்ணப்பரின் பெருங்காதலின் முன் எதுவும் நிற்க இயலாது. கண்ணப்பரிடம் வளர்ந்த பெருங்காதல் அருளாக வளர்ந்தது.

காளத்தி இறைவன் கண்ணப்பரின் இடுக்கணைநீக்கி ஆட் கொண்டருளினன், திருக்காளத்தியில் கண்ணப்பருக்கு ஏது இடுக்கண்? காள்த்தியப்பனுக்கல்லவா இடுக்கண் வந்துற்றது! ஆம்! காளத்தி இறைவன் கண்ணில் உதிரம் கொட்டியது! கண்ணப்பருக்கு ஏது இடையூறு ! காளத்தி இறைவனின் கண்களில் குருதி கொட்டியதைக் கண்ணப்பர் தமக்குற்ற இடராக எடுத்துக் கொண்டார்! பிறர்க்குற்ற இடரைத் தமக்குற்ற இடராக எடுத்துக் கொண்டு தீர்வுக்கு முயல்வது உயர்சால்பு. கண்ணப்பர் அத்தகு உயர்சால்புநெறி நின்றவர். கண்ணப்பர் நிறைநலஞ்சான்ற அன்பு பெற்று வளரக் காளத்தி இறைவன்கண்ணில் குருதி கொட்டுகிறது. கண்ணப்பரின் மாறிலா அன்பில் காளத்தியப்பர் மகிழ்ந்துறையும் காளத்தியை நம்பியாரூரர் அணைந்தார். கண்ணப்பரின் அன்பில் நனைந்தமலையில், கண்ணப்பரின் அன்பொடு நம்பியாரூரரின் அன்பு காலந்து ஆறாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. நம்பியாரூரர் இந்த ஈறிலாத அன்பில் நனைந்தவாறு காளத்தி மருந்தை வணங்கினார். காளத்தி இறைவன் கண்ணப்பரின் இடுக்கணுக்குப் பரிவு நிறைந்த மருந்து. நம்மனோரின் ஆணவம் சார்ந்த பிறவிக்கு மருந்து. காளத்தி இறைவன்மீது நம்பியாரூரர் "செண்டாடும்" என்று எடுத்துப் பதிகம் பாடிப்பரவினார்.

தவசீலரான தம்பிரான் தோழர்

நம்பியாரூரர் திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள கணநாதப் பெருமானை வணங்கி மகிழ்ந்து "செண்டாடும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இத்திருப்பதிகத்தில் "சீரார் தமிழ்” என்று நம்பியாரூரர்