பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காஞ்சிக் காமக்கோட்டத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் முன் நம்பியாரூரரைப் புகழ்தல் மூலம் அன்பு செய்ய வேண்டிய கடமைப் பாட்டினை உணர்த்துகின்றார். பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு கண்டத்தில் அடக்கி அமரர்களுக்கு வாழ்வளித்தவன் இறைவன்! அதனாலேயே இறைவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் பெருவழக்காக வழங்குகிறது.

"விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சிஏ கம்பனே! கடையானேன்”

என்கிறார் ஆரூரர்.

விண்ணோர்களுக்கு அருள் செய்த நீ எனக்கு அருள் செய்யாதது ஏன்? என்கிறார். அடுத்து நம்பியாரூரர் தன்நிலை விளக்கம் ஒன்று தருகிறார். அதாவது அவர் பிழைசெய்தது உண்மை. அந்தப்பிழையை எண்ணித்திட்டமிட்டுச் செய்யவில்லை என்பதை "எண்ணாத பிழை பொறுத்து" என்று பேசுகிறார்; கண் தந்தருளும்படி வேண்டுகிறார்.

காஞ்சியில் எழுந்தருளியுள்ள இறைவன். மங்கை தழுவக் குழைந்தவர். திருவருட் சக்தியாகிய அம்மையின் ஆதரவால் இடது கண் கிடைக்கிறது. அடுத்து நம்பியாரூரர்க்குத் திருவாரூர் செல்லும் ஆர்வம். திருவாரூர் செல்லும் வழியில் திருவாமாத்துரர் வந்து சேர்கின்றார். திருவாமாத்துார் இறைவனை வணங்கி மகிழ்ந்து சான்றோர் வளர் தொண்டைநாடு கடந்து சோழவளநாடு வந்தடைகின்றார். திருவாவடுதுறையை வணங்குகின்றார். திருவாவடு துறையில் ஒரு கண் இல்லாத குறையை நினைந்து வருந்திப் பாடுகின்றார்! இறைவா! எனக்கேது உறவு? நின்னையல்லால் உறவு ஏது? என்று கூறித் தாழ்ந்து பணிகின்றார். கண்ணில் நோய் ஒன்றும் சுந்தரரைப் பற்றி யிருக்கிறது. "புதிய நோய்" என்று சேக்கிழார் கூறுவதால் அதுவந்த நோய் என்று உணர முடிகிறது. திருத்துருத்தியில் எழுந்தருளியுள்ள இறைவனை