பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

313


முடியும்! ஒத்திவைக்க முடியும்.! உனக்குநான் ஆட்பட்ட குற்றத்தை தவிர வேறு ஒரு குற்றமும் செய்ததில்லை! என் கண்களைப் பறித்துக் குருடாக்கினாய்! ஏன் குருடாக்கினாய்? உனக்கே பழி. மற்றொரு கண்ணைத் தந்தருள்க! அப்படித்தர விருப்பமில்லையாயினும் ஆகுக! நீ வாழ்ந்து போ! திருத்துருத்தியில் உறையும் ஈசனே திருப்பழனத்தை ஊராகக் கொண்டவனே! திருச்சோற்றுத் துறையை ஆள்பவனே! ஆயினும், இறைவா! உனது நிலையான இடம் திருவாரூர்தான்! இறைவா, உனக்கு எத்தனை திருத்தலங்கள் இருந்தும் என்? அடியார்கள் மனமே உனக்குச்சிறந்த இருப்பிடம்! அடியார்கள் மனமே உனக்குத் திருக்கோயில்! சொல்லித் தெரிய வேண்டியதில்லை! ஆயினும், ஏன்? உன்பால்மிகவும் அன்புடைய அடியார்கள் அவர்களுடைய துன்பத்தைச் சொன்னாலும் தீர்த்து வைப்பதில்லை! அது மட்டுமா? உனது கோட்பாடே விரோதமாக இருக்கிறது! இப்பிறப்பில், இம்மண்ணில் அடியார்களை வருத்துவது, மறுமையில் இன்பம் தருவது என்று கொள்கை வைத்திருக்கிறாய்! இதுதான் உனது கொள்கையாயின் வாழ்ந்து போ” என்று பாடுகிறார்.

பொதுவாகச் சமயநெறிகள் மறுமை நோக்கியனவாகவே அமைந்துள்ளன; ஆற்றுப்படுத்துகின்றன. "இந்த உலகத்தில் துன்புறுகிறவர்கள் அடுத்த உலகத்தில் பாக்கியவான்கள்” என்று விவிலியம் கூறும். இந்தக் கொள்கை இன்று விவாதத்திற்குரிய பொருளாகிவிட்டது,

"செத்தபிறகு சிலோகம் வைகுத்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் பித்த

மனிதர்"

என்பார் பாரதியார். இந்த உலகத்தில் துன்புறுதலால் மறு உலகத்தில் இன்புறுதல் என்ற மதக்கோட்பாட்டு வழிதான் சாதி ஆதிக்கமும், சுரண்டும் பொருளாதார ஆதிக்கமும் கால் கொண்டுள்ளன. நம்பியாரூரர் இந்தக் கொள்கையை இந்தப்