பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. ஏயர்கோன் கலிக்காம ஆனி - இரேவதி (1) சிவனடியாராக இருப்பவர்களுடன் எவரோடாயினும் நாயனர். இரேவதி தனிப்பட்ட முறையிலோ-ஆட்சி முறையிலோ வருத்தம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த வருத்தத்தை மாற்றி உடன்பாடும், உறவும் - காணுதல்.
13. ஏனாதி நாயனார் புரட்டாசி - உத்திராடம் (1) தூய வெண்மையான திருநீறு தயாரிப்புக்குத் உத்திராடம் திட்டமிடல், உற்பத்தி செய்தல்.
(2) திருநீறு தூய்மை செய்தல், வேண்டுவோர்க்கு வழங்குதல்.
(3) திருநீற்றுக் கலன்கள்-குங்குமக் கலன்கள் செய்ய ஏற்பாடு செய்தலும், தேவைப்படும் இடங்களில் அமைததலும.
(4) திருநீற்றுத் தேவைக்குத் திட்டமிடுதல்.
(5) அன்பர்களுக்கு வழங்கத் திருநீற்றுப் பைகள்தைக்க ஏற்பாடு செய்தல்.
14. ஐயடிகள் காடவர் கோன். ஐப்பசி - மூலம் (1) அன்பர்களுடன் திருத்தலப் பயணம் செய்தல்.
15. கனநாதர் பங்குனி - திருவாதிரை (அ) 1 சமயப் பாடவகுப்பு, திருமுறைப்பள்ளி நடைமுறைகளை ஆராய்தலும், சிறப்புற நடத்தத் திட்டமிடுதலும்.
2. சமயப்பள்ளி வகுப்புகளுக்கும், திருமுறைப்பள்ளி வகுப்புகளுக்கும் ஆண்டு விழா நடத்துதல்.