பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40. திருஞானசம்பந்தர் வைகாசி-மூலம் (1) ஆதீன-தேவாலய மருத்துவமனை நடைமுறை பற்றி ஆய்வு செய்தல்.
(2) உடல் நலக்குறைவு காரணமாக இளைத்த பெண்களுக்கு-மாணவிகளுக்குச் சத்துணவு கொடுக்க ஏற்பாடு செய்தல்.
(3) தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபடுதல்.
(4) திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் வளர்ச்சி-பணி பற்றி -> ஆய்வு செய்தல், திட்டமிடுதல்.
41. திருநாவுக்கரசு சுவாமிகள் சித்திரை-சதயம். (1) (அ) அப்பர் சுவாமிகள் திருமேனிக்குச் சிறப்பு வழிபாடு செய்தல்.
(ஆ) உழவாரத் தொண்டு செய்தல்.
(இ) உழவாரப் பணி செய்யும் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(2) (அ) திருமுறைக் கோயில்கள் அமைத்தல்.
(ஆ) திருமுறை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(3) (அ) திருவுலகு, திருமெழுக்கு இடும் முறை கவனித்தல்-சீரமைத்தல்.
(ஆ) மேற்படி பணிசெய்யும் பணியாட்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.