பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(2) திருக்கோயில் திருமடங்களின் சார்பாளர்களின் மவைாழ்க்கை மாறுபாடின்றி நிகழும் வகையை ஆராய்தல்.
(3) கருத்து மாறுபாடு இருப்பின் உடன்பாடு செய்வித்து இன்ப உறவினை வளர்த்தல்.
(4) குடும்பத்துடன் அழைத்து விருந்து வைத்தல்-மகிழ்வித்தல்.
(5) தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், சீலம் நிறைந்த வாழ்க்கைக்கு முயலுதல்.
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் வைகாசி-மூலம் (1) திருமுறைப் பண்ணுக்குத் துணை இசைக் கருவிகள் இயக்குபவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக் குரியன நாடுதல்.
(2) இயலுமாயின் அந்நாளில் துணை இசைக் கருவிகளுடன் திருமுறைப் பண்ணிசையரங்கு அமைத்தல்.
(3) திருமுறைப் பண்ணிசை யரங்கிற்குச் சிறந்த முறையில் துணை இசைக் கருவிகள் இயக்கும் ஒருவரைப் பராட்டிப் பரிசு வழங்குதல்.