பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(7) தீவட்டி எடுக்கும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(8) திருக்கோயில்களில் கைவிளக்கு எடுக்கும் முறை-வகைபற்றி ஆராய்தல்.
(9) திருக்கோயில்களில் கைவிளக்கு எடுக்கும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், - பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
48 நரசிங்கமுனையரைய நாயனர் புரட்டாசி-சதயம். (1) திருக்கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களின் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, சிவாகமப் பயிற்சி, திருமுறைக் கல்வி ஆகியன குறித்து ஆராய்தல்.
(2) அந்தக் குழந்தைகளுடன் (5 வயது முதல் 15 வயதுவரை) கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல்.
49. நின்றசீர் நெடுமாற நாயனார் ஐப்பசி-பரணி (1) கிறித்தவ, இசுலாமிய சமயங்களிலிருந்து நமது சமயத்திற்கு மாறியோர் நலன் பேணுதல்.
(2) விரும்புவோரை மதம் மாற்றுதல்.
(3) நம்முடைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் பிறமத மாற்றத்துக்கு ஆளாகாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்தல்.