பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(2) வெளி-நிழல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பந்தயங்கள் நடத்தி, வெற்றிபெற்ற கட்சியின் பந்தயத் தொகையைத் திருக்கோயில்களுக்குக் கொடுக்கச் செய்தல்.
(3) "மூர்க்க நாயனார் விளையாட்டுப் போட்டி” என்று விளையாட்டுக்குப் போட்டிக்குப் பெயர் வைத்தல்.
60 மூர்த்தி நாயனார் ஆடி-கார்த்திகை (1) திருக்கோயில்களில் சந்தனத் திட்டம் சரிபார்த்தல்.

(2) சந்தனம் அறைவைக் கட்டை தரம் பார்த்தல்.

(3) மேடை-அறைவைக்கல் சீர் செய்தல்.

(4) இயலுமானால் சந்தனமுழுக்கு-சந்தனக் காப்புச் செய்து சிறப்பு வழிபாடு செய்தல்.

(5) சந்தன அறைப்புப் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.

61 மெய்ப்பொருள் நாயனார் கார்த்திகை-உத்திரம் (1) நம்முடனும், நம்முடைய நிறுவனத்திடமும் கருத்து வேறுபாடு அல்லது மாறுபாடு - கொண்டிருப்பவர்களுடன் உடன்பாடு கண்டு உறவு வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தல்.