பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அறுபான்மும்மை நாயன்மார் அடிச்சுவட்டில்

திருத்தொண்டு நடை முறைச் செயல் குறிப்பு விதி முறைகள்.

1. அறுபான் மும்மை நாயன்மார் திருத்தொண்டு நடைமுறைச் செயற் குறிப்பினை நடை முறைப் படுத்த ஆதீனம் அலுவலகத்தில்-வளர்ச்சித் துறையில்-ஒரு துறை அமைக்கப் பெற்று, எழுத்தர் ஒருவரும் நியமிக்கப் பெற்றுள்ளார்.

2. இந்தத் துறை "திருத் தொண்டு” என்று அழைக்கப்பெறும்.

3. ஒவ்வொரு நாயன்மார் திரு நட்சத்திரம் வருகின்ற நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அந்தந்த நாயன்மார் திருத் தொண்டைச் செயற்படுத்தக் கோப்பைத் தொடங்கி விடவேண்டும்.

4. நாயன்மார் திருத்தொண்டைச் செயற்படுத்துதற்குரிய அறிக்கை, அறிவிப்பு ஆகியவற்றைத் திருத் தொண்டுத் துறை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அனுப்பிவிட வேண்டும்.

5. (அ) திருத் தொண்டுச் செயல் முறை சுற்றறிக்கைகளைப் பெற்றவர்கள் வாங்கிய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் முறையாகப் பூர்த்தி செய்து அனுப்பிக் கொள்ள வேண்டும்.

(ஆ) திருத்தொண்டுச் செயல் முறை அறிவிப்புகளின் படி செய்யத் தேவையான தொகைக்கு அறிவிப்புக் கிடைத்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் அனுமதி (சாங்ஷன்)க்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

6. கிளை அலுவலகங்களிலிருந்து அறிக்கைகள் வந்து தலைமையலுவலகம் சேர்ந்தவுடன் (15 நாட்களுக்குள்) படிவங்களை ஆய்வு செய்து அறிவுரைகள்