பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணம் சொற்பொழிவுகள்

25


சேக்கிழார்

ஏழாம் நூற்றாண்டு, தமிழகச் சமயத்தின் மறு மலர்ச்சிக் காலம் என்று கூறவேண்டும். ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த மாறிலா மறுமலர்ச்சி யியக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் பேணிப் பெரிதும் வளர்க்கப் பெற்று நிலை நிறுத்தப் பெற்றது. முன்னர்க் குறிப்பிட்டது போலத் தமிழகத்தில் ஆரவாரமின்றி அமைதியாக அருளொழுக்கம் பூண்டு திருத்தொண்டு செய்தவர்கள் காலத்திற்குக் காலம் இருந்து வந்துள்ளனர். இந்தத் திருத்தொண்டியக்கம், புறச்சமயத் தாக்குதல்களினால் ஏழாம் நூற்றாண்டில் வீறுபெற்று எழுந்தது. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த இந்தச் சமயப் புத்துணர்ச்சி-எழுச்சி பத்திவழிப்பட்ட திருத்தொண்டியக்கமாகவும், சமூக நல் வாழ்வுக்குரிய நற்பணியியக்கமாகவும் வளர்ந்து வடிவம் பெற்றது. அந்தப் பத்தியியக்கத்தில் ஈடுபடும் தொண்டர்கள் நாடெங்கும் பல்கிப் பெருகினர். ஆயினும், திருத்தொண்டர் களின் வரலாறொன்று முழுமையாக இல்லை. அதனால், பத்தியின் பயனையும் திருத்தொண்டின் சிறப்பையும் எளிதில் மக்கள் அறிந்து அவ்வழி நின்று ஒழுகுதற்குரிய வாய்ப்பு அருகிப் போயிற்று. புனைகதை வடிவிலமைந்து புகுந்த பிற சமயக் காப்பியங்கள் தமிழ் நாட்டில் தலையெடுக்கத் தொடங்கின. இந்தக் காலக் கட்டத்தில்தான்் சேக்கிழார் தோன்றிச் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் அரண் செய்தார். தமிழக வரலாற்றில் வேளாளப் பெருங்குடி மக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று வந்திருக்கின்றனர். தமிழக வேளாளப் பெருங்குடி மக்கள் தாளாண்மையிலும் வேளாண்மையிலும் சிறந்து விளங்கியதோடன்றி அரசவைகளில் அமைச்சர் களாகவும், அறங் கூறுவோர்களாகவும், பெரும்படைத் தலை வர்களாகவும், உற்றுழியுதவும் படை வைப்பினராகவும், பேரரசர்களுக்கு முடிசூட்டும் பொழுது அந்த அணி மணி