பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியினை எழிலுற எடுத்துக் கொடுப்பவர்களாகவும், மகட் கொடை நல்கும் மாண்பினராகவும் இருந்திருக்கின்றனர். இவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருமுறையில் பாடிச் சிறப்பித்துள்ளார்.

     "வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
     தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
     வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும்
     தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

-2. 42.3

என்பதூஉம்,

   "நன்மையான் நாரணனும் நான்முகனும் காண்பரிய
   தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
   இன்மையாற் சென்றிரந்தோர்க் கில்லையென்னா தீந்துவைக்கும்
   தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

-2, 42,6

என்பதூஉம் திருஞானசம்பந்தர் திருப்பாடல்களாம்.

இங்ஙனம் வழிவழிச் சிறந்த விழுத்திணை வேளாண் மரபில் - சேக்கிழார் குடியில், சேக்கிழார் அவதரித்தார். சேக்கிழார் குடியில் தோன்றி, விளங்கிய புகழ் படைத்ததால் அந்தக் குடியின் பெயரே, இவர் பெயராகச் சிறப்புற வழங்குவதாயிற்று. இவருடைய இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பது. இவர் வாழ்ந்த காலத்தைக் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும், முதுபெரும் புலவர் க. வெள்ளை வாரணனார், சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தின் பிற் பகுதியும், இரண்டாம் இராசராசனின் மைந்தனாகிய மூன்றாம்