பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புராண வரலாறு செய்து அதில் சேக்கிழாரை வாழ்த்தியுள் ளார். மாதவச் சிவஞான முனிவர், திருத்தொண்டத் தொகை நூலை விரித்துச் சொல்ல வல்லவர் சேக்கிழாரே என்று போற்றிப் பரவுகின்றார்.

"துர்க்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி னாற்சொல்ல வல்லபி ரானெங்கள் பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்"

-காஞ்சிப் புராணம். சிறப்புப் பாயிரம். 17

       "திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத்
           திணைவளமும் தெரித்துக் காட்ட
       மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்க்
           குலக்கவியே வல்லான் அல்லாற்
       கருத்தொண்டர் எம்போல்வா ரெவ்வாறு
           தெரிந்துரைப்பார் கலந்தார்க் கின்பம்
       அருத்தொண்ட ரணியிலவை யொன்றோடொன்
           றியைந்தனவும் ஆங்காங் குண்டால்”

-காஞ்சிப்புராணம். திருநாடு. 128

என்று பாடுகிறார்.

"
...............சங்கரன்தாள் தமது
சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தைஅள விடநஞ்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே"

என்பது திருத்தொண்டர் புராண வரலாற்று (51)ப் பாட்டு. சேக்கிழாரைப் போற்றிப் பாராட்டாமையைத் திருப்பெருந் துறைப் புராண ஆசிரியர், "கடும் பிழை” என்று கூறுகிறார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடிப் பரவித் துதித்துள்ளார். கவிச்சக்கர வர்த்தி கம்பன் போன்றோர், சேக்கிழாரின் செஞ்சொற்