பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணம் சொற்பொழிவுகள்

35


நடுக்கமின்றி, இன்பம் விழையாது இடும்பை இயல்பெனக் கொண்டு ஏற்றுத் தம்குறிக்கோளினையும் அதனைச் சாரத்திருவருளையும் அடைந்தனுபவித்தார்கள்.

பெரியபுராணத்தில் மகளிர்

சேக்கிழார் படித்துய்யப் படைத்துக் காட்டும் மங்கையர் திலகங்கள் "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்ற வினாவுக்கு விளக்கங் கூற வந்த பாத்திரங்களாவர். நமது இன, சமய வரலாற்றில் மங்கையர் பெற்றிருக்கும் சிறப்பு, பெருஞ்சிறப்பாகும். ஆடவர் தடம்புரண்டாலும் அவர்கள் தடம்புரளாது நெறியில் நின்றொழுகி வாய்மை வரலாற்றை வளப்படுத்தியிருக்கிறார்கள். சிலம்பில், கற்புக்கரசி கண்ணகி, மங்கை நல்லாள் மாதவி ஆகியோர் நிறை நெறியில் நின்று ஒழுகியவர்கள். கோவலன் ஒருதடவைக் கிருதடவை நெறிபிறழ்ந்தான். முறைபிறழாப் பேரரசுக்குப் பேர் போன பாண்டியப் பேரரசனும் அரசியல்நெறி பிழைத் தான். கூன்பாண்டியன் மாறவர்கன் அரிகேசரி தொன்று தொட்டுத் திருவருளால் தன் நாட்டில் நின்று நிலவியதும், தான் நின்றொழுகிப் பேணிக்காக்கவேண்டியதுமான பெரு நெறியை மறந்து "கொல்லாமை மறைந்துறையும் சமண்சமயம் குறுகினான். ஆனால், வளவர்கோன் பாவையராகிய மங்கையர்க்கரசியார் மாறவில்லை. மாறாத தோடன்றிப் பாண்டிய நாட்டைச் சிவநெறியில் மீட்டும் முன்போல் நிலை நிறுத்தும் வரலாற்றுப்புகழ் மிக்க சாதனையையும் செய்து முடித்தார். அதனாலன்றோ சேக்கிழார் "மங்கையர்க்குத் தனி யரசி எங்கள் தெய்வம்" என்று வாழ்த்துகிறார். பரமதத்தன் தனது வாழ்க்கையிற் பங்கேற்ற அருமை மனைவி புனிதவதி யார்க்கு ஒரு கனி வேண்டும் என்ற உணர்வின்றிக் கனிகள் இரண்டையும் கலத்திலிடப் பணித்தான். ஆனால் தவக் கொழுந்து புனிதவதியார் தாம் துய்க்கும் வேட்கையின்றி விருந்தும் கொழுநனும் துய்க்கவே விரும்பினார். ஏன்? ஏழாம்