பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூற்றாண்டில் தமிழகவானில் இருள் கடிந்தெழுந்த ஞாயிறாக உலாவிய தமிழாளியர், தமிழ்த்தலைவர் திருத்தொண்டின் நெறிக்காவலர், எவ்வுயிர்க்கும் இர்க்கம் இதயத்தே இயல் பாகவே கொண்டவர், முடியாட்சியை மறுத்திட்ட முதற் புரட்சிவீரர், பழுதிலாத் துறவறம் பூண்டவர், முன்னமே சிவத்தினைப் பிரியாத சிந்தை பெற்றவராக விளங்கிய நந்தம் குலமுதல்வர் மறையாசிரியர், வழித்துணை மாமருந்து அப்பரடிகளே கூடத் தொடக்கத்தில் தடம்புரண்டார்; தவமார் சிவநெறியகன்று அவமுறுஞ் சமண்நெறி நின்றார். அப்பருக்குத் தமக்கையாராகவும் அதிகையப்பருக்கு அணுக்கத் தொண்டராகவும், தவத்திற்கொரு கொழுகொம் பாகவும் தூண்டு தவவிளக்காகவும் திருவாளன் திருநீற்றின் திருநிறையாற்றலை விளக்க வந்தருளிய தந்நிகரில் தண்ணிலா வாகவும், தமிழினவரலாற்றை-தமிழகச் சமய வரலாற்றைத் தொய்வுவிழாமல் தூக்கி நிறுத்திய வரலாற்றுச் சிற்பியாகவும் விளங்கி, உயிர்க்குரிய நெறிபேணித் தந்தமையால் தமிழினத் திற்கு அன்னையினும் மேம்பட்ட அன்னையென நினைந்து நினைந்து வாழ்த்தி வணங்குதற்குரிய அன்னை, திலகவதியார் தடம்புரளவில்லை. இங்ங்னம், நாம் கூறுவதால் ஆடவருலகம் வருந்த வேண்டியதில்லை. நமது வரலாறு இப்படித்தான்் அமைந்திருக்கிறது! இனிவரும் வரலாற்றிலாவது ஆடவர் தடம் புரளாமல் தகுதிப்பாட்டுடன் நெறிநின்றொழுகிப் புகழ் சேர்க்க வேண்டும். எந்த இனத்தின் வரலாற்றுக்கும் தூய்மை மாறாத் தாய்மையுலகம் சிறப்புற்றிருப்பது பெருமைக்குரியதேயாம்

பெரியபுராணத்தில் மக்கட்பேறு

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு”
(60)

என்பது குறள். மக்கட்பேறு உலகியற்கை ஆனால், நன்மக்கட்பேறு இயல்பாக அமைவதன்று குடும்பத் தலைவனும்