பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழங்கும் பணியாள். அவரை அணுகினார் அப்பரடிகள். "அப்பரடிகள் பெயரால் இத் தண்ணிர்ப் பந்தல் அமைத்தது யார்?’ என்று கேட்கிறார். அப்பூதியடிகளின் பணியாள் தெளிவாக விடை தருகிறார். அந்த விடையில் அப்பரடிகளின் பெருமை, அப்பூதியடிகளின் சிறப்பு, அப்பூதியடிகள் ஆற்றிய பிற அறங்கள் அனைத்தும் விளக்கமாகக் கிடைக்கின்றன. அடுத்து அப்பரடிகள் "அவர் எவ்விடத்தார்?" என்று வினவுகின்றார். அதற்கு எளிமையாக இன்றையப் பணியாளாக இருப்பின் "இந்த ஊர்தான்” என்று கூறுவர். ஆனால், அப்பூதியடிகளின் பணியாள், அந்த வினாவுக்குக் கூறிய விடை அடுத்து வினாக் கேட்க முடியாதவண்ணம் விளக்கமாக அமைந்திருக்கிறது. இத்தகு பணியாட்களைப் பெற நாம் த்வம் செய்தோமில்லை; என்ற ஏக்கம் வருகிறது! அந்தப் பணியாள் தந்த விடை

"துன்றியநூல் மார்பருமித் தொல்பதியார்,மனையின்கண்
சென்றனர், இப் பொழுது, அதுவுஞ் சேய்த்தன்று நணித்து"

என்பது. இங்ஙனம் சிறந்த பணியாட்களின் இயல்புகளைச் சேக்கிழார் செப்பும் முறைமை அறிந்து பாராட்டுதலுக் குரியது; பயன் பெறுதற்கும் உரியது.

பெரியபுராணத்தில் நட்பு

ஒருவர் வாழ்க்கை சிறப்புற ஒர்ந்துணரும் ஒப்பில்லா நட்பு இன்றியமையாதது. காதலிலும் நட்பே விழுமியது, காதலின்றி வாழலாம். ஆனால், நட்பின்றி வாழமுடியாது. நட்பு, மிகமிகத் தூய்மையானது. சேக்கிழார், நட்பின் இலக்கணத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். நட்பு என்பதும் தோழமை என்பதும் ஒரு பொருள் குறிக்கும் சொற்களேயாம். சுந்தரர், சிவபெருமானையே வலிய வந்து