பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாறாகத் தண்ணிர் கிடந்த சுவடுகூடத் தெரிவதற்கில்லை. அப்பரடிகள், யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்தேன் என்று கூறுகிறார்.


"மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான்
                                                மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின்
                                               புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடை கின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறுவருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதம் கண்டறி யாதன
                                               கண்டேன்”

என்பது அப்பர் திருப்பாடல், இங்குச் சுவடு என்பது உயிர்ச் சுவடுகளாகும். உயிரின் விருப்பும் வெறுப்பும், பற்றும் பாசமும் உயிரில் பதிந்து, அதுவே ஊழாக உருவம் பெற்றுப் பின்னைப் பிறப்பை வழங்குகிறது. ஆதலால், சிறந்த சமய வாழ்க்கையென்பது உயிரில் தன்னலச் சுவடுகள் அழுந்திப் பதியா வண்ணம் தற்காத்துத் திருவருட் பதிவும், திருத் தொண்டுணர்வின் சுவடும் பெறவாழும், பெருவாழ்வாகும். அப்பரடிகள். அங்ங்ணம் வாழ்ந்த, உலக வரலாறு கண்டறியாத ஒரு நிறை நலம் சான்ற, ஞானி. அவர்தம் சிந்தையில் சிவத்தின் பதிவைத் தவிர வேறு பதிவில்லை. அவர்தம் திருமேனியிலும் சிவத்தின் உடைமையென்பதை வெளிப்படுத்தச் சூலமும் இடபமும் பொருந்திய இலச்சினை களையும் கொண்டு திகழ்ந்தார். புறத்துங் காட்டப்படுவது போன்று சிவபெருமான் திருவருளால் கயிலைக் குளத்தில் மூழ்கித் திருவையாற்றுக் குளத்தில் எழுங்கால் இடை நிலங்களில் அப்பரடிகளின் திருவடிச் சுவடு சிறிதும் பதியாத பாங்கமைந்தது.

ஆதலால், தவம் என்று தமிழ்ச் சான்றோர் கருதியது, உடற் பழக்கத்திற் கியைந்த தவச் செயல்களையல்ல. “தவமும்