பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

45


பெரியபுராணச் சொற்பொழிவுகள் 45 .

சுருங்கிற்று. ஆனால், அவர்மனம் சுருங்கவில்லை. நஞ்சனைய நல்குரவு வந்து பற்றியது. நல்குரவால் நடுக்கமுறுவர் பலர். ஆனால், நமது மாறனார் நடுக்கமுற்றாரில்லை. g)_(FH) t_6Fs)lf)e?Fáið) sós?" விற்றும், கடன்பட்டும் தாமெடுத்த தொண்டினைத் தொடர்ந்து செய்தார். ஒருநாள், மழையில் நனைந்த சிவனடியார் ஒருவர், நள்ளிரவில் நாயனார் வீடு வந்தார். நாயனார், அடியாரை வரவேற்று ஈரவுடைமாற்றி இருக்கச் செய்து, அவர்தம் முகம்பார்த்துப் பின் அருமை வாழ்க்கைத் துணைவியின் முகம்பார்த்து,


"தீர வேபசித்தார் செய்வதென்?"

(10)

என்றார். மாறனாருக்கேற்ற மனைவியானதால், தமது பட்டினி உணர்ந்தாரில்லை. அண்டர் நாயகனடியார்க்கு அமுது செய்வித்தல் வேண்டும். அதற்கேற்ற ஆலோசனையை அணங்கு, அண்ணல் மாறனாருக்கு எடுத்துக் கூறுகிறார். வாழ்க்கையின் துணைமட்டுமில்லாமல் வழி நடத்தவும் செய்கின்ற ஆற்றலிருந்தமையை அறிதல் வேண்டும். அன்று மாறனார் வயலில் விதை பாவப் பெற்றது அம்மையார் நினைவுக்கு வருகிறது. அதை அரித்துக் கொண்டுவந்தால் வறுத்துக் குற்றிச் சமைத்து உணவாக்கலாம் என்ற அறிவொடுபட்ட ஆலோசனையை உறுதியுடனும் துணிவுடனும் அம்மையார் அன்பொடு கூறுகிறார். வித்தடுதலை யாரும் விரும்பி ஏற்பதில்லை. வித்தடுவதால் முதலுக்கு இழப்பு: பின்னேயுண்டாம் ஆக்கத்திற்கும் பேரிழப்பு. ஆயினும், கேடும் ஆக்கமும் கெட்ட திருவிற் சிறந்த நங்கை இந்த உறுதியை உளமுற ஏற்றுக்கொண்டது, வியக்கத்தக்கதன்று. கணவர் கழனிக்குச் சென்று நெல் அரித்துக்கொண்டு வந்து கொடுத்ததை, வாயிலினின்று வாங்கி, வீட்டலகு விறகால் வறுத்துக் குற்றிச் சோறாக்கிக் கறியமுது சமைக்கக் கொல்லைப் புறத்திலிருந்த கீரையைக் கணவரைத் துரண்டிப் பறிக்கச்செய்து, ஒரு கீரையைக் கொண்டு பல்வகைக் கறியமைத்து விருந்தமைத்த மாறனார்