பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனைவியின் திறத்தினை என்னென்று கூறிவாழ்த்துவது! இங்ங்னம், சேக்கிழார் சிறந்த மனையறத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறார்.

பெரிய புராணத்தில் சமூகத் தகுதிப்பாடு

பெரிய புராணம் ஒரு புரட்சிக் காப்பியம்; சமுதாய நூல். சேக்கிழார் காலத்தில் தமிழகத்தில் தமிழினத்திற்கு உரிமையல்லாத சாதிவேற்றுமைகள் கால்கொண்டு விட்டன. சேக்கிழார் சாதிவேற்றுமைகளைக் கடிந்து ஒதுக்காமல் ஒன்றிலொன்று உளங்கலந்து உயர்வற உயர்ந்த ஒழுக்கத்தாற் கலக்கச்செய்து, சாதிவேற்றுன்மயை அகற்றுகிறார். பெரிய புராணத்தில் தமிழகத்தின் ப்ல்வேறு குலத்தைச் சார்ந்த அடியார்கள் பேசப்பெற்றுள்ள்னர். திருஞான சம்பந்தருக்கும் யாழ்ப்பாணருக்கும் இடையிலுண்டான உறவைப் பாராட்டிப் பாடுகின்றார். அந்தணரிற் சிறந்த அப்பூதியடி களுக்கு, அப்பரடிகள்பால் ஏற்பட்ட உறவை, இல்லை, பத்திமையைச் சேக்கிழார் பாடுவதே பாட்டு! ஆதிசைவ மரபினில் தோன்றி, அரசரிடத்தில் வளர்ந்து கணிகையர் குலத்துப் பரவையாரை அகத்திணைக் களவு முறையாற் காதல்மணம் செய்த, வேளாண்குடிமரபுச் சங்கிலியாரையும் அகத்திணைக் கற்பு முறையான் மணந்த சுந்தரர் வரலாற்றைச் சுந்தரத் தமிழில் சேக்கிழார் எடுத்துக்கூறிச் சாதிகுல வேற்றுமைகளை அகற்றும் அரிய பணியைச் செய்ததுபோல் செய்தவர் யார்? ஆதலால், . சேக்கிழாரின் பெரியபுராணமே சாதிகளைக் கடிந்தெழுந்த முதல் வரலாற்று நூல் தத்துவத்தால் மட்டுமன்று நடைமுறையில் சாதிவேற்றுமைகளை மறந்து ஒருகுல உணர்வோடு நின்றொழுகியவர் வரலாற்றையே சேக்கிழார் பாடியுள்ளார். சேக்கிழார்முன் மனுநீதிச்சோழனும் திருக்குறிப்புத் தொண்டரும் ஒருதன்மையராகக் காட்சியளிக்கப் பெற்று வாழ்த்தப்படுதலினும் மிக்க புரட்சி ஏது?