பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 நிகழ்ச்சி துணையாக இருந்தது என்பதற்காகத் தம் அருமந்த மகனின் உயிரையே வழங்கிய நீதியின் சிறப்பை என்னென்போம்! தண்டனை வழங்குதலின் நோக்கமே ஒரிழப்பை ஈடு செய்வதற்குத்தான்! இறந்த பசுவின் கன்றுக்கு இனிய மைந்தனின் நல்லுயிர்! கன்றையிழந்து வருந்திய பசுவுக் கீடாகத் தன் மைந்தனை இழந்து தான் துன்புறுதல்! இந்தப் பெரிய புராண நியதி எங்கே? நம்முடைய வாழ்க்கை எங்கே?

ஒருவர் ஒன்றன் மீது உரிமை கொண்டாடுதல் அவ்வளவு எளிதன்று. அந்த உரிமையைச் சோழப் பேரரசால் ஊர்தோறும் திருக்கோயிலின்கண் அமைக்கப் பெற்ற பஞ்சாயத்தின் முன் சாட்சியங்களுடன் எடுத்துக் கூறிப் பஞ்சாயத்தின் தீர்ப்பின் மூலம் உரிமையடைய வேண்டும். இறைவனே, "சுந்தரர் தமது ஆள்” என்ற வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்க்கோயிலிலமைந்திருந்த பஞ்சாயத்தார் முன்னேயே எடுத்துக் கூறுகிறார். அந்த வழக்காடிய படலத்தைச் சேக்கிழார் பாடியிருப்பது அவருடைய அறநெறிச் சார்பான அமைச்சியலை நன்கு வெளிப்படுத்துகிறது. ஒர் உரிமையை நிலை நாட்டுதற்கு அடியிற் கண்டவாறு ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்றயலார் தங்கள், காட்சியில் வேண்டுமென்பது சேக்கிழாரின் கொள்கை

பெரியபுராணத்தில் சமயம்

பெரியபுராணம் ஒர் உயர்ந்த சமய நூல்; உலகப் பொதுச் சமயநூல். சமய நெறிகளின் பெயர்களும் வழிபடும் பொருளின் பெயரும்-பெறும் கோலமும் மாறுபட்டாலும் சமய நெறியின் அடிப்படை இயல்பு, மாறி விளங்க வழியில்லை. கடவுளை நம்புதல், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பே தவமாதல், திருத்தொண்டில் இன்பமார்தல் ஆகியவை அனைத்துலகச் சமயத்திற்கும் பொதுவான கொள்கை, இத்தகு சமய நெறியில்