பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




2

திருமுறைகளின் மாண்பு


வரலாற்று வழியிலே கண்ணோட்டத்தைச் செலுத்துகின்றபோது, காலத்தால்-கருத்தால்-நாகரிக முதிர்ச்சியால் மூத்த பழமையுடைய இனமாக மிளிர்கிறது நமது தமிழினம். அத்தகைய இனத்தின் தனிச் சொத்துக்களாக, உலக இனங்களின் நலனில் நாட்டம் கொண்ட தத்துவங்களாக ஒளிர்கின்றன. திருமுறைகள். திருமுறைகளைப் பயில்வதனாலே சமய அறிவு பெறுவதோடு, காலப்போக்கில் சமய உணர்வை-அனுபவத்தை நாம் பெறுகிறோம்; வாழ்க்கையில் இன்பத்தை அடைய அவாவுறும் நாம் திருமுறைநெறிகளால் பேரின்பப் பேற்றினையும் அடைகின்றோம். கடவுளை எங்கோ தூரத்தில் வைத்து வணங்கிய நிலைமாறி மிக மிக அண்மையில் எம்பிரானை அழைக்க-காண-வாழ்த்தவணங்கத் திருமுறைகள் வாய்ப்பளிக்கின்றன.

திருமுறைக் கடலிலே ஆழக் குளிக்கின்றபோது, சமுதாய நன்மைக்காக-மனிதஇன மேம்பாட்டிற்காகப் பாடு பட்டுழைக்க வேண்டுமென்ற வேட்கையுண்டாகின்றது. நாடு உய்யவந்த நாவுக்கரசரது திருவார் தேவாரத் திருப்பதிகங்களினாலே தீதகற்றி திறமையும் திண்மையும் நிரம்பி, உள்ள உறுதியையும் பிறர்க்காக உழைத்துப் பேரின்பமடையும்