பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சூடானதும் ஆமையைப் பக்குவப்படுத்த எண்ணுகின்றாள். உலையிலே சிறு சூடு ஏறியதும் உள்ளிருந்த ஆமையின் உள்ளம் இன்பம் அடைகின்றது. சதா காலமும் குளிர் நீரிலே வாழ்ந்த ஆமைக்கு இளஞ்சூடு இதங்கொடுக்கின்றது-இன்ப மளிக்கிறது. உலைப்பானைக்குள் ஆமை மகிழ்ந்து ஒடியாடித் திளைக்கின்றது. அறியாமையின் கொடுமையை அந்த ஆமை சிறிது நேரத்தில் அனுபவிக்கத்தான் போகிறது. இளஞ்சூடுகடுஞ்சூடானதும் இந்த உலகத்தையே இழக்கப்போகிறோமே என்று உணரும் ஆற்றல் அதற்கு அப்பொழுது இல்லை. காரணம் அந்த ஆமையின் அறியாமையே! அதுபோலவே தான் உயிரினங்கள் அனைத்தின் உள்ளமும் உணர்வும் இருக்கின்றன.

வாழ்க்கை என்ற அடுப்பு-அனுபவம் என்ற பானைஆர்வம் என்ற தண்ணிர், உயிராகிய ஆமை; ஆசையென்ற தீ எரிகிறது. உலகியல் இன்பமாகிய இளஞ்சூடு உயிரை இதப்படுத்துகிறது. பாவம்! அறிவிலே தெளிவில்லாததால் உயிர் அல்லற்படுகிறது. இத்துன்பத்தினின்று நீங்கி எல்லை யில்லா இன்பம் பெற உதவும் சமயக் கோட்பாட்டின் தலையாய தொகுப்பே திருமுறைகள்.

திருமுறைகளிலுள்ள பாடல்கள் தெய்வமணங்கமழும் செய்யுட்களாகவும், தீந்தமிழ்ச் சுவை சொட்டும் தெய்வீகக் கனிகளாகவும் திகழ்கின்றன. ப்த்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய நமது நாயன்மார்களின் பாடல்கள், பரமன்பதம் நாடுவதற்கும், பரமன் விரும்பும் செயல்களைச் செய்வதற்கும் தூண்டுகோல்களாய்த் தோன்றுகின்றன. நாளுக்கு நாள் நாழிகைக்கு நாழிகை-அவகாசங் கிடைக்கும் போதெல்லாம் திருமுறைகளைப் படித்து அனுபவித்தால் இனிய பரிபூரண ஆனந்தத்தில் திளைக்கமுடியும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. நெஞ்சைத் திறந்து நேசத்தைப் பெருக்கி அகத்தில் ஊற்றெடுக்கும் அன்பினை வெளிக் கொணர்ந்து அறமானவைகளைச் செய்து