பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




5

முதலும் முடிவும்

ஒரு செல்வந்தர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்தார். அதற்கு நாள்தோறும் பாலும் சோறும் பரிவுடன் ஊட்டுவார். பஞ்சணையில் படுக்கவைப்பார். இப்படி செல்லமாக வளர்த்தும் அந்த நாய்க்கு அந்த வாழ்க்கையில் விருப்பமில்லை. தெருவெல்லாம் ஒடிச் சுற்றி அலைவதிலும் எச்சில் இலை பொறுக்கித் தின்பதிலுமே நாட்டம் கொண்டிருந்தது. அதுவே இன்ப வாழ்க்கை எனவும் கனவு கண்டுகொண்டிருந்தது. தன்னுடைய இன்ப வாழ்வுக்கு இடையூறாகத் தன்னை வளர்ப்பவர் இருக்கிறாரே என்று எண்ணிக் கவலைப்பட்டது. இதன் காரணமாக வளர்ப்பவரை ஏமாற்றி விட்டு விதிப்புறம் ஓடிவந்துவிட்டது. ஓடிவந்த நாய் அயலில் உள்ள குப்பைமேட்டில் சென்றுபடுத்துப் புரண்டு இன்பத்தை அனுபவித்தது.

நாயின் வளர்ப்பாளர் நாயைக் காணாமல் பாசத்தின் மிகுதியால் தேடி அலைந்தார். கடைசியில் நாய் குப்பை மேட்டில் படுத்திருப்பதைக் கண்டுவிட்டாலும் அருகிற் சென்று ஆசையோடு கூப்பிட்டார். நாய் வருவதாக இல்லை. அதனிடம் "என்னைத் தெரியவில்லையா? நான்தான்ே உன்னைப் பாலும் சோறும் ஊட்டி வளர்த்தேன். என்னிடத்தில் வா"