பக்கம்:குமாரி செல்வா.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அம்மா அவசரம் அவசரமாக உள்ளே மறைந்தாள். மகள் தயங்கித் தயங்கி கடந்து வந்து ஒரு நாற்காலி அருகில் நின்றாள்.

“உட்காருங்க ஸார்” என்றாள் பணிவாக, குமாரியின் குதிப்பும் களைப்பும் எங்கே பம்மி விட்டன என்ற வியப்பு எழுந்தது அவருக்கு உட்கார்ந்தார்.

அவர் பார்வை எங்கும் சுழன்றது. நாகரிகம் ஆட்சி புரிந்த அழகு நிலையம்தான். செயலான குடும்பம்தான். அம்மாவையும் மகளையும் தவிர வேறு, யாரையும் காணோமே. முதலில் பிறந்த சந்தேகம் மீண்டும் தலை துக்கியது அவர் மனதில்.

‘உங்கள் ஆபீசுக்கு நானே வரவேணும் என்று எண்ணியிருந்தேன்’ என்றாள் குமாரி.

‘ஆமாம். இன்று மத்தியானம் போகலாம் என எண்ணினேம். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்’ என்று சொல்லியபடி தோன்றினாள் பெரியவள் கையிலிருந்த கிளாஷை நீட்டி ‘இந்தாங்க, காப்பி சாப்பிடுங்க’ என்று உபசரித்தாள்.

காப்பியை வாங்கி குடித்து முடித்து வீட்டு ‘ஏன், என்ன விசேஷம்?’ என்று கேட்டார் அவர்.

‘உங்களைப் பேட்டி காணத்தான்!’ என்றாள் குமாரி.

‘பேட்டியா! என்னேயா! நீங்களா! அஹஹா!’ என்று அவுட்டுச் சிரிப்பு சிதறினர் அவர்.

‘ஆமா. இனிமேல் நீங்கள் யாரையும் பேட்டி காணப் போவதில்லை, நட்சத்திரங்கள் வேண்டுமானால் நம்மை வந்து’ பார்க்கட்டுமே என்று எழுதியிருக்கிறீர்கள் அல்லவா! அதனால்தான்!

‘நீங்கள் நட்சத்திரமா?!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/15&oldid=1310410" இலிருந்து மீள்விக்கப்பட்டது