பக்கம்:குமாரி செல்வா.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

‘எதிர்கால நட்சத்திரம்’ என்று உறுதியாகச் சொன்னாள் அவள். ‘குமாரி செல்வா என் பெயர். நாட்டியம் தெரியும் நடிக்கவும் முடியும். பட முதலாளி தான் எதிர்ப்படவில்லே. நான் இன்றைய நட்சத்திரங்களைப் பற்றி எண்ணுவதை எல்லோரும் அறிய வேண்டும், அதற்கு புதுமையைத் துணிகரமாகக் கையாளும் உங்கள் பத்திரிகை துணை புரியும் என்று நினேத்தேன்’ என்றாள் அவள்.

புதுமைமோகமும் துணிச்சலும் எங்கிருந்து எப்படி வேண்டுமன்யினும் கிளம்பலாம் என்பதை அறிந்திருந்த ஆசிரியர் பிரமிக்கவில்லை. பாராட்டினர். ‘ரொம்ப சந்தோஷம். இப்பவே நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுங்கள்.! எதிர்பாராத சக்திப்பு புது ரகமான பேட்டியாக மாறி விடட்டுமே!’ என்று கனைத்தார் பரமசிவம்.

‘செல்வாவுக்கு ஐஸ் க்ரீம்னா உயிர். ரொம்ப அதிகமாத் தின்னதேம்மா. பல்லுக்கு கெடுதி. உடம்புக்கும் ஆகாது யின்னு சொல்வியாச்சு. கேட்டால்தானே. நற நறன்னு கடிச்சுத் தின்னுவா, ஒண்னுக்குப் பிறகு ஒண்ணு. அதுக்கு மேலே ஒண்னு யின்னு டஜன் கணக்கிலே தின்பா. இப்ப அவள் தின்னது எட்டாவதோ, ஒன்பதாவதோ, அதுதான் கூடாது யின்னு அவள் கையிலே யிருந்து பிடுங்க வந்தேன். அவள் விழுந்தடிச்சு ஒடி வந்து உங்க மேலே மோதிவிட்டாள்!’ என்று விளக்கம் கூறினாள் தாய்.

‘நானாக யிருக்கப் போய், நல்லதாச்சு வேறே வீணன் எவனாது வந்திருந்து இப்படி நடந்திருந்தால் என்னாகிறது?’ என்று திருவாய் மலர்ந்தருளினர் ஆசிரியர்.

‘என்னாகும் தெரியாதா! குமாரியின் ரோஜாப் பூக் கன்னம் செவ்வரளியாக மாறிப் போகும். அடிபட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/16&oldid=1310414" இலிருந்து மீள்விக்கப்பட்டது