பக்கம்:குமாரி செல்வா.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே, உங்கள் படங்கள் ஜோராக யிருக்கும். உங்கள் நடிப்பு அற்புதமாக யிருக்கும் நீங்கள் நட்சத்திசமானதும் ரொம்பப் பிரமாதமாக இருப்பீர்கள்!”

‘அதுதானே ஷார். புகழ்பெற்ற நடசத்திரங்களை மட்டுமே பேட்டி கண்டு போடுவதிலே அர்த்தமே கிடையாது. புகழ் பெறப்போகிற நட்சத்திரத்தைத் தேடிப் பிடித்து, அபிப்பிராயம் பெற்றுப் பிரசுரிக்க வேண்டும். என்ன, நான் சொல்றது?’ என்று கேட்டாள் குமாரி. அப்போது அவள் சித்தரித்த பாவங்கள் ரொம்பப் பிரமாதம்.

“ஸார், என் பெயர் செல்வா. குமாரி செல்வா. எனக்கு வயது பதினெட்டு, நான் இன்டர் படிக்க ஆரம்பித்து, அப்புறம் வேண்டாமென்று விட்டுவிட் டேன். ஸ்கூல் டிராமாக்களில் அடிக்கடி ஆக்ட் பண்ணி யிருக்கிறேன். டான்ஸ் தெரியும். பாட்டு கொஞ்சம் கொஞ்சம் வரும் பிளேபாக் ஸிஸ்டம் மிகுந்துவிட்ட இக்காலத்திலே ஸ்டார்களுக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது, இல்லையா ஸார் ?”

“நீங்கள் சொல்வது ரொம்ப நியாயமானதே?” என்றேன்.

‘சினிமாக் கலை வளரவேணுமானல் என்னைப் போன்ற நட்சத்திரங்களைத் தேடிப் பிடித்துப் போட வேண்டும். ராணிகுமாரியும், சந்திரமதியும், ரோஜாம்பாவும், அவளும் இவளும் நடிக்கிறதை விட நான் பிரமாதமாக நடிக்க முடியும். உங்கள் வால்நக்ஷத்திரம் பத்திரிகையில் இந்த நட்சத்திரங்களை நீங்கள் பேட்டி கண்டு எழுதிய கதையை நான் மிகவும் ரசித்தேன். எல்லாரும் ரொம்பப் பாராட்டுறாங்க ஸார். அதனால் தான் நானே வந்து உங்களைப் பேட்டி காண நினைத்தேன். எதிர்பாராதவிதமாகப் பேட்டியே பேட்டிக்கு ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/20&oldid=1310423" இலிருந்து மீள்விக்கப்பட்டது