பக்கம்:குமாரி செல்வா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


றையே மிகுதியும் ரசித்து மகிழும் குமாரி செல்வாவின் பண்பிலே கிழக்கும் மேற்கும் கலந்த அவியற் கலாசாரத் தைக் காண முடிவதில் வியப்பில்லை என்று முடிவு கட்டினார் அவர்.

’இருக்கட்டுமே! அதனால் ஒன்றும் முழுகிவிட வில்லை, குமாரி செல்வா அழகி. விளையாட்டுப் பருவம். ஜாலியாக வாழும் ஆசை அவள் உள்ளத்தில் நிறைந் திருக்கிறது, களங்கமில்லை. கவலையில்லை. கூத்தடிக்கும் சிறுபிள்ளைத்தனம். வாழ்க்கையை விளையாட்டாகவே மதித்து நாளோட்டுவதினால் எவ்வித நஷ்டமும் வந்து விடப் போவதில்லையே!’ என்று பேசியது மனம்.

மனக்குறளியின் மற்றொரு பண்பு குரல் கொடுத் தது: ’இப்படி எங்கும் எல்லோரிடமும் தாராளமாகப் பழகினால் என்னாவது? அவள் கெட்டுப்போக நேரிடும். சந்தர்ப்பமும் சமுதாய நிலையும் துணையற்ற பெண்ணை-அதிலும் தாராளமாகப் பழகுகிற குமாரியை-புனிதை யாய் வாழவிடாது. அவள் பண்பாடே அவளுக்குத் தீங்கு பயக்கும் கருவியாகி விடும்.’

’உம். கெடவேனும் என்றிருந்தால் எந்தப் பண் பாட்டினரும் கெட்டு நாசமாகத்தான் போவார்கள். படியாத பெண்களும், பிரைமரியை மட்டுமே தாண்டிய அச்சம்-மடம்-பயிர்ப்பு-காணத்தனக் குமரிகளும் கறை படித்த மலர்களாகி விடவில்லையா? சினிமாவைப் பார்த்துவிட்டு, சினிமாச் சிங்கரரிகளின் பகட்டான வாழ்வை யறிந்து, தாங்களும் அவ்வித மத்தாப்பூ சுந்தரிகளாக மாறிப் பலரையும் தம் அழகு வெளிச்சத் தினுல் கிரங்கடிக்க வேணும் என்ற ஆசை கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளுகிற பாவையரின் எண்ணிக்கைதான் குறைவா. என்ன! வளர்ந்துவரும் நாகரிகம் நன்மைகளுடன் பல நாரசங்களையும் தூவி வருகிறது’ என்று பேசிய்து அவர் மனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/23&oldid=1315645" இலிருந்து மீள்விக்கப்பட்டது