பக்கம்:குமாரி செல்வா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22


'அவளது குறைகள் நிறைவுகள் எவையே யாயி னும் சரி ; குமாரி செல்வா ரொம்ப நல்ல பெண்’ என்று ஸ்ர்டிபிகேட் கொடுத்தார் அவர்.

’ஆமா. அதிலே சந்தேகமே கிடையாது. அவள மனுச் செய்துகொண்டால், அவளையே எனது காரிய தரிசியாக ஏற்றுக் கொள்வேன் ' என்று எண்ணிச் சிரித்தது அவர் உள்ளம்.

2

ஆசிரியர் பரமசிவம் குமாரி செல்வாவைப்பற்றி எண்ணிய அபிப்பிராயங்களில் தவறே கிடையாது. அவள் போக்கு அப்படித்தானிருந்தது.

கொஞ்சம் படிப்பு வாசனை பெற்றுவிட்டதுமே இந்தக் காலத்துப் பெண்கள் சினிமா ஸ்டார்கள் போல் திகழவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்கி ழர்கள். அதனால் வாத்தியாரம்மாக்கள் கூட எக்ஸ்ட்ரா நடிகைகள் மாதிரிக் காட்சியளிப்பதையே நாம் காண முடிகிறது. வீட்டரசிகளுக்குக் கூட எக்ஸ்ட்ரா நடிகை யரே லட்சியமாகி வழிகாட்டுகிற இந்த யுகத்தில் நர்ஸ்ம்மா சங்கரபுஷ்பத்தின் மகள் செல்வா சினிமாக்காரி மாதிரி வாழ்க்கை நடத்துவதில் வியப்பில்லை.

பள்ளிப் படிப்பும், சினிமாப் படங்களும். தமிழ் நாட்டு. சமுதாயத்திலே-முக்கியமாக பெண் குலத் திலே-அழுத்தமாகச் சுவடுகள் பதிப்பதற்கு முன்பு, மேற்கும் கிழக்கும் சந்திக்க முயலும் அவியல் கலாசா ரத்தை அதிகம் கையாண்டவர்கள் ’சட்டைக்காரர்கள்’ என்று புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியர்களும் ’வேதக் காரர்கள்’ என்று சிறப்புப்பெற்ற கிறிஸ்துவர்களு மாவர். இவர்களது நாகரிகம் பெண்களிடையே ’மிஸ் ளியம்மா’க்களாலும் நர்ஸம்மா’க்களினாலும் வளர்க்கப் பட்டு சுதந்திர ஆர்வமுள்ள வேறு பலருக்கு லட்சிய மாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/24&oldid=1315657" இலிருந்து மீள்விக்கப்பட்டது