பக்கம்:குமாரி செல்வா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29


நஷ்டம் கலை உலகிற்கும் நாட்டின் அழகு ரசிகர்களுக்கும் நல்ல லாபமாக மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது" என்று கூறிக் கலகலச் சிரிப்பு சிந்தினாள் செல்வா.

’அப்படியா! ரொம்ப சந்தோஷம், ரொம்பசந்தோஷவும்!' என்று பாராட்டி மகிழ்ந்தான் மைனர். ’அந்நாள் எந்நாளோ என்று ஏங்கிக் கிடப்பார்கள் என்னைப் போன்ற அழகுப்பித்தர்கள், கலைரசிகர்கள் எல்லோரும்!’

'என்ன சொல்கிறீர்கள், மிஸ்டர் ராஜ்? உங்களு டைய அபிப்பிராயத்தைத்தான் கேட்கிறேன். அழகும். திறமையும் எங்கும் ஒளிவீச சினிமா துணைபுரியும் என்பது சரிதான். ஆனால் அதைவிட நேரடியாக மேடைமீது தோன்றிக் கலை விருந்து அளிப்பது தானே நல்லது?’ என்று கேட்டாள் குயிலி.

’சந்தேகமில்லாமல்! வனப்பின் வளைவான வான வில்லை ஒவியத்திலே பார்ப்பதும் இனிமையாகத் தனனிருக்கிறது. ஆனால் வண்ணங்கள் பூத்த அழகுவில்லை. வானத்திலே கண்ணுறக் காண்பதில் தானே அற்புத மகிழ்ச்சி உண்டாகிறது!’ என்று அளந்தான் அவன்.

’அப்படீன்னா நான் சினிமாவில் நடிப்பது நல்ல தல்ல என்று சொல்கிறீர்களாக்கும்?’ என்று குரலை இழையவிட்டு, இதழ்க்கடையில் குறுநகை செலுத்தி, எழிலாய் முகம் திருப்பி, சுழலும் பார்வையை அவன் மீது நிறுத்தினாள் அவள்.

அப்பொழுது கார் ஒரு வீதியின் திருப்பத்திலே நெளிந்து நீந்தியதனால் ஒர்த்திலிருந்த தெருவிளக்கின் மின்னொளி குறிப்பாக அவள் முகத்தில் பாய்ச்சிய ஒளி வீச்சு போல் பரவி அவள் நிலையை நன்கு வெளிச்ச மிட்டது. பையன் சொக்கிப்போனான் அவள் பேரழகிலே! கிரங்கிக் கிறுகிறுத்தான் குமாரியின் கண் வீச்சி லே! அவன் உள்ள நெகிழ்வை உணர்ந்து வெற்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/31&oldid=1314723" இலிருந்து மீள்விக்கப்பட்டது