பக்கம்:குமாரி செல்வா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31


தாய் சங்கரபுஷ்பம் அடுப்பங்கறையில் தங்கியிருந்த போது, செல்வா ராஜாவுக்குத் தனது ஆடை அணி அலங்காரப் பொருள்களை யெல்லாம் காட்டினாள்.

’ஒரு டான்ஸ் குரூப் ஆரம்பிக்கணும். அதற்காகத் தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சேகரித்து வருகிறோம்!’ என்றாள் அவள்.

’நல்ல ஏற்பாடு’ என்றான் அவன்.

’சினிமாவிலே நல்ல சான்ஸ் கிடைத்தால்தான் நடிப்பது. அதிலும் அவர்களாகத் தேடி வந்தால்தான் ஒப்புக்கொள்வது என்று எண்ணம். பாருங்க மிஸ்டர் ராஜ், நாமாகப் போனால் படாதிபதிகள் நம்மை மலிவாக மதித்து விடுகிறார்கள். மேடைமீது தோன்றி திறமையினாலும், விளம்பரங்கள் பத்திரிகைப் பப்ளிஸிட்டி முதலியவைகளினாலும் கவனத்தைக் கவர்ந்த பிறகு அவர்களாகத் தேடிவந்தால் நமது மதிப்பு உயர்ந்து விடுகிறது.

’மதிப்பை நிர்ணயிக்கத் தெரியாத மடையர்கள்! அவர்கள் கெட்டார்கள்!' என்று அழுத்தமாக அறிவித் தான் அவன்.

’அவர்கள் தயவு நமக்கு வேண்டி யிருக்கிறதே! நமது திறமை எங்கும் பரவவும், நமது புகழை அதிக மாக்கவும் .....’

’கவலைப்படாதே செல்வா! நாமே ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து விடலாம். முதலில் ஒரு நாட்டிய சிங்காரியின் கதையைப் படம் பிடிப்போம். அதில் உங்கள் திறமையையும் அழகையும் எவ்வளவு துரம் சோபிக்கச் செய்யலாமோ அவ்வளவுக்குப் பிரமாதப் படுத்தி விடலாம்’ என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/33&oldid=1315693" இலிருந்து மீள்விக்கப்பட்டது