பக்கம்:குமாரி செல்வா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32


வியப்பால் விரிந்தன அவள்கண்கள். மகிழ்வு பூத்தது. அவள் முகத்தில் உள்ளத்திலே உற்சாகம் குமிழிட்டுக் கொப்புளித்தது. ஆணந்தமாகவே மாறிவிட்டாள் குமாரி. சிட்டுக்குருவி போல் தத்திக்குதித்தாள். மணிப் புறாபோல் துள்ளி வட்டமிட்டுக் குதூகலத்தினால் கூவினாள். ’அஹஹா ஹொஹ்ஹோ !’ என்று கலகலத் தாள். ’ராஜா என் ராஜா!’ என்று பாடி ஆடி அமர்க் களப்படுத்தி அவன் அருகில்வந்து கன்னத்தில் அன்பாக வருடினாள் வளைகள் கலகலத்த மணிக் கரத்தினாலே.

ராஜா இந்த உலகத்திலிருப்பதாகவே நம்பவில்லை. விண்ணிலே பறப்பது போல, ஆனந்தச் சிறகுகள் பேற்று அற்புதலோகம் எங்கோ சுழன்று நிற்பதாகத் தோன்றியது அவனுக்கு. எதிரே அழகின் உயிர்ப்பாய் ஆடிய குமாரி கவிதையின் சிரிப்புபோல் காட்சிதந்தாள். இளமையின் பூர்ணமான அவள் கலையின் அலை துரை யாய், மலர்க்கூட்டத்தின் ஒளிக்கொடியாய், அற்புத மாய் இசையாய் நயமாய் வாழ்வாய், வாழ்வின் சிறப்பாக-எப்படி எப்படி யெல்லாமாகவோ-தோன்றினாள். ’இந்த இன்பம் நிலைத்திருப்பதற்காக, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பணம் வேணுமாயினும் வாரி இறைக்கலாம்’ என்று கிசுகிசுத்தது அவன் மனம்.

கன்னம் தொட்ட மணிக்கரத்தைத் தன் கைநீட் டித்தொட முயன்ற வேலையிலே பிடியினில் அகப்படாக் கனவின் எழில்போல் விலகி ஓடினாள் குமாரி. தூர நின்று கிண்கிணிச் சிரிப்பு ஆர்த்துக் குதித்தாள்.

’ஏது ஆனந்தம் ஆளையே தூக்கிக்கொண்டு போகு தே! ஏனம்மா இந்தச் சிரிப்பாணியும் குதிப்பும்? என்று கேட்டபடி வந்தாள் தாய், டிபன் காபி முதலியன சுமந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/34&oldid=1315697" இலிருந்து மீள்விக்கப்பட்டது