பக்கம்:குமாரி செல்வா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37


திருமணம் செய்துகொண்டு நல்வாழ்வு வாழத் தொடங்கினான்.

’நாட்டிய அழகி’ என்று புகழ்பெற்ற குமாரி செல்வாவுக்கு சினிமாப் புகழ்பெறும் ஆசை வளர்ந்தது. அவள் அழகிலும் புகழிலும் மயங்கிய டைரக்டர் ஒருவரை அவள்முன் கொண்டுவந்து தள்ளியது சக்தர்ப்பம். அவர் அவள் ஆசையைத் தூண்டிவிட்டு தனது ஆசையைத் தணித்துக் கொண்டார்!

சில மாதங்கள் அவருடன் சுற்றியலைந்தும், சினி மாப் பார்த்ததும், ஜாலி வாழ்வு வாழ்ந்ததும் தான் கண்ட பலன். அவர் டைரக்ட் செய்வதாக யிருக்த படம் பேச்சளவிலேயே முடிந்துவிட்டது. பனம் போடத் தயாராக யிருந்தவர்கள் அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டார்கள். ஆகவே ஆறேழு மாதங்களுக்குப் பிறகு செல்வாவைக் கைவிட்டு விட்டார் அவர்.

குமாரி செல்வாவுக்கு ’உலகம் எப்படியிருக்கிறது’. என்ற உண்மை சிறிது சிறிதாகப் புரிந்தது. அதற்குள் அவள் எத்தனையோ விதமான அனுபவங்கள் பெற்று விட்டாள். ரகம்ரகமான ஏமாற்றுக்காரர்கள், பகட்டுப் பெரியார்களுடனெல்லாம் பழக நேர்ந்தது.

’இவர்களை யெல்லாம் பார்க்கும்பொழுது, ராஜா: எவ்வளவோ நல்லவர் என்று தோன்றுகிறது’ என்று எண்ணுவாள் அவள். ’அவர் விரும்பியபடி அவரையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம். அவருடன் வாழ்க்கை நடத்த இசைந்திருந்தால், அந்தஸ்தாவது இருக்கும். பலபேரை நம்பிக் கெட்டிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது!’ என்று கூட நினைத்தது உண்டு. ஆனால் அபூர்வமாக எப்பவாவது தான்!

புகழ்ப் பசியும் சுதந்திர தாகமும் தணியமுடியாத அளவிலே இருந்ததனால், குமாரி செல்வா இஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/39&oldid=1315716" இலிருந்து மீள்விக்கப்பட்டது