பக்கம்:குமாரி செல்வா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



41


பிறகு 'அம்மா செளக்கியமா?' என்று விசாரித்தார்.

'அம்மா இறந்து இரண்டு வருஷங்களாச்சு, ஸார்'

’அப்போ நீங்கள் ?’

’எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. ஆனல்... நான் வந்து...வந்து ஸார் என் கூட........”

அவள் எப்புடி விளக்குவது என்று திண்டாடித் திணறிய வேளையிலே, ’செல்வா’ என்று அழைத்தபடி ஒரு பரட்டைத்தலையர் வெளியே வந்தார். அவர் தலை முடித்தோற்றமே அவர் ஒரு நாட்டிய நிபுணர் என்து சுட்டிக் காட்டியது.

பரமசிவத்துக்குத் தன் நண்பர் ஒருவர் குமார் செல்வாவின் வாழ்க்கை மாற்றங்கள் பற்றிக் கூறியது. அப்பொழுதுதான் நினைவின் மேல் பரப்பிற்கு வந்தது.

’ஒ!’ என்றார் ஆசிரியர். அந்த ஒரு உச்சரிப்பில் எவ்வளவோ அர்த்தம் பொதிந்திருந்தது.

’தெருவிலே நின்று என்ன நாடகம் இது, செல்வா?’ என்று கடுகடுத்தார் உள்ளிருந்து தலைநீட்டிய உத்தமர்.

‘வீட்டுக்குள்ளே வாங்க ஸார்’ என்று அழைத் தான் செல்வா. கையிலிருந்த மாம்பழம் முழுவதையும் சாப்பிட்டு, கொட்டையைத் துார எறிந்துவிட்டு உள்ளே செல்லத் தயாரானாள் அவள்.

’இதைத் தட்டிப்பிடுங்க வந்தார் இவர். நான் ஒட ஆரம்பித்தேன். அவர் துரத்தவும் நான் தெருவுக்கே வந்து விட்டேன் என்றாள்.

’ரொம்ப சந்தோஷம். நீங்கள் பழைய குமாரி செல்வா ஆகவேதான் இருக்கிறீர்கள் இன்றும். ஆனால் உருவத்தில் மட்டும் கொஞ்சம் மாறுதல்’ என்றார் பரமசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/43&oldid=1315722" இலிருந்து மீள்விக்கப்பட்டது