பக்கம்:குமாரி செல்வா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4 அவ்வளவு உணர்ச்சிகளையும் அனுபவிக்க நேர்ந்தது எதிர்பாரா வகையிலே

   ஆசிரியர் அறையின் ஆடும் கதவு குறைக் காற்ருல் மோதுண்டதுபோல் படீரெனத் திறந்தது. பரமசிவம் எரிந்து விழுவதற்குள் திடும் பிரவேசம் செய்தாள் ஒரு யுவதி. அக்த இதழின் அட்டைச் சித்திரம் நேரடி விஜயம் செய்திருப்பதை உணர்ந்ததும் எரிக்கும் பார்வை சிந்தாமல் இனிய சிரிப்பையே உதிர்த்தார் பரமசிவம். - -
 'குமாரி செல்வாவுக்குக் குதித்துக் குதித்தோடி வரத்தான் தெரியுமே தவிர, தென்றல் கடை நடக்கத் தெரியாது போலும் ' என்ருர் அவர்.
  'போதும்!'எனச் சிடுசிடுத்தாள் சிங்காரி. நீலப் பரவாடை அலேயென ஆட, ரோஜா நிறத் தாவணி அசைக்தாட, இரட்டைப் பின்னல் நெளிந்தாட, கரு விழிகள் கில்லாது சுழன்ருட ஓடி வந்த குமாரி அமைதி யாக கிற்கத் தெரியாதவள் போல் அசைந்தாடி கின்றது ஆசிரியரின் விமர்சனத்திற்கு அழுத்தம் கொடுத்தது.
  ' உட்காரலாமே!'.என்ருர் அவர்.
  இங்கு நான் உட்காருவதற்காக வரவில்ல' என்று சினுங்கினுள் எழிலி,
  'சந்தோஷம். அப்போ தாராளமாக கில்லுங்கள் : எனக் கண்த்தார் பரமசிவம்.
  'சும்மா கின்று கொண்டிருப்பதற்காகவும் வர வில்லே ' என்று சீறினுள் பாவை,
  ' ரொம்ப சந்தோஷம். கோல மயில் போலக் குதித் தாடுங்கள். வன்னப் புரு போலே வட்டமிட்டு..'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/6&oldid=1312206" இலிருந்து மீள்விக்கப்பட்டது