பக்கம்:குமாரி செல்வா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குலம்-இப்படியா எழுதுவது?’ என்று உறுமினாள் உங்களிடம் கேட்டு விட்டுத்தானே எழுதினேன். இதில் வந்து என்ன தப்பு இருக்கிறது ?? ‘மண்ணாங்கட்டி! எனது உருவம் ஏணி மாதிரி யாகவா இருக்கிறது? உடுக்கிடை, சிற்றிடை என் றெல்லாம் ரசிகர்கள் வியந்து பாராட்ட வேண்டிய இடையின் நயத்தைக் கெடுத்து இவளென்ன உரலோ என எண்ணும்படியாக எழுதிவிட்டீர்களே ஐயா ! இதிலென்ன தவறு என்று வேறு கேட்கிறீர்கள். நன்று நன்று. நம் ஆசிரியத் திறமை ! என்று நீட்டி முழக்கி னாள் குமாரி. . எனக்கெதுவும் புரியவில்லை அம்மானே! புரியும் படி பேசுவதே நல்லதுகாண் அம்மானே ! . புரிய வைப்பதற்காகத் தானே வந்தேன். என் இடையின் அளவு 31 அங்குலமல்ல. நீங்களே அளந்து பாருங்கள ’ என்று சொல்லி நேராக நின்றாள் அப் பூங் கொடி, . - ஆசிரியர் பரமசிவம் செயலற்றுப் போனார். எத் தனையோ சவால்களை ஏற்றுக்கொண்ட சூரப்புலிதான் அவர் வரலாறு விஷயத்திலே புதுமையாக எழுத லாம் என்று துணியப் போய் வீணான வில்லங்கம் வந்து விட்டதடா பரமசிவம்! அட பரமசிவம் என்று தன் ஆத்மாவுக்கு உபதேசித்த தோழருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதிரே இயற்கை வனப்பும் செயற்கை அழகும் கலந்த காந்த உருவமாய் நின்ற குமாரியைக் கவனித்தார். அது தவறு என்றால் உள்ள அளவை நீங்களே சொல்வி விடுங்கள். அடுத்த இதழில் திருத்தம் எழுதி விடுகிறேன். இதற்காக நீங்கள் இப்படி....... .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/8&oldid=1394004" இலிருந்து மீள்விக்கப்பட்டது