பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குறிஞ்சிமலர்

'அதையும் பார்த்தேன்."

'தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன்தான்!” அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக் கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:

'அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்.

'நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி, இதோ முகவரி' என்று விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடை பெற்றுப் போகும் போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய் விட்டானா, என்ன?

அன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்கு சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கர சுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறிப் பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய் விட்டாள்.

8

"நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய் பொன்னானாய் மணியானாய் போகமானாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/104&oldid=555828" இலிருந்து மீள்விக்கப்பட்டது