பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 109 வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா."

'நீங்கள் சொல்லவே வேண்டாம். நான் உங்கள் வார்த்தை யைக் காப்பாற்றுவேன்.'

அந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண் டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காணமுடிந்தது.

பூரணியக்கா நீங்க தினம் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. ரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற் போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம் பரிசுத்தமாகப் போயிடுது' என்று களங்க மின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம்.

"செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்' என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். .

'இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாயிருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா!' என்றவாறே புள்ளிமான் போலத் துள்ளிக் குதித்து ஓடி வந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். டிரைவரைக் காரை எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு: என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்து விட்டாள் பூரணி. -

"என்னை நடந்து போகவிடுங்கள், அம்மா அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/111&oldid=555835" இலிருந்து மீள்விக்கப்பட்டது