பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 115

அவர்கள் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது கடைசி பஸ்ஸும் போய் விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்ஷா விலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்ப வில்லை, தயங்கினாள். 'நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்' என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பஸ் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள். .

'நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்.'

'திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா?" 'திருப்பரங்குன்றம் வரை என்ன? உங்களோடு இப்படியே கன்யாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்' என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு கார் வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்து விட்டது. கோபத்தோடு அந்தக் கர்வம் பிடித்த கார்க்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார். -

"பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்பு பூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள் பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல் பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி'

- சது.சு. யோகி

அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த இரவில் தான் அரவிந்தனின் எல்லையற்ற மனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/117&oldid=555841" இலிருந்து மீள்விக்கப்பட்டது